பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፱፻8 - அபிராமி அந்தாதி

(ஒளி நிலையாக நிற்கும் நவகோண சக்கரத்தை விரும்பி அதில் தங்கும் அபிராமியே, புறத்திலே யாவரும் காண எழுந்தருளிய நின்னுடைய அழகிய திருக் கோலத்தைப் புறத்தும் அகத்தும் தரிசித்து, அதனால் அடியேனுடைய கண்களிலும் நெஞ்சிலும் நிலைத்து நின்ற ஆனந்த வெள்ளத்துக்குக் கரைகாண முடியவில்லை. அடியேன் உள்ளத்தில் தெளிந்து நின்ற மெய்ஞ்ஞானம். விளங்குகின்றது; இன்னும் என்ன என்ன அநுபவத்தை அடியேனுக்கு வழங்கவேண்டுமென்பது உன்னுடைய திருவுள்ளமோ!

வெளி-புறம். விழி புறத்தில் வடிவத்தையும், நெஞ்சு அகத்தில் தேசுருவத்தையும் கண்டன. தெளிநின்றதெளிந்து நின்ற, தெளிவாக நின்ற.

அம்பிகையைப் புறத்தே தரிசித்து அகத்தே தியானித் தால் மிக்க இன்பம் உண்டாகும் என்பது இதன் கருத்து.

இது அபிராமி அந்தாதியில் 19-ஆவது பாடல்.