பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகையின் திருக்கோயில்கள்

அம்பிகை எங்கும் உறைகிறாள். அவள் எங்கும் நிறைந்த பரிபூரணையாக இலங்குகிறாள். வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு கோலம் கொண்டு சேவை சாதிக் கிறாள். அம்பிகை கொள்ளும் திருவுருவங்களுக்குக் கணக்கு வழக்கே இல்லை. இன்னும் புதிய புதிய உருவங்களை எடுப்பாள். புராணங்களாலும், சாஸ்திரங்களாலும், ஆகமங்களாலும், வேதங்களாலும் அறியப்படும் அவளு டைய மூர்த்தங்கள் பல. அவ்வக்காலத்தில் பக்தர்களுக்கு அருள் செய்ய எடுத்துக் கொள்ளும் கோலங்கள் ೬J6ು எல்லாவற்றையும் தொகுத்துச் சொல்ல யாராலும் முடியாது. n

அபிராமி பட்டர் அம்மையின் திருக்கோலங்களை எண்ணிப் பார்க்கிறார். ஏதாவது ஒரு வகைப்படுத்திப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. இடங்களை வகைப் படுத்தி, இன்ன இன்ன இடங்களில் நீ எழுந்தருளியிருக் .கிறாய்' என்று சொல்ல விரும்புகிறார். அவள் உள்ள இடங்கள் எல்லாவற்றையும் சொல்லி முடிக்கத்தான் இயலுமா? ஆதலின் சிலவற்றை எடுத்துச் சொல்ல விரும்பினார்; சொல்ல முயன்றார்; இதுவோ, அதுவோ என்று வினாவாக வைத்துச் சொல்லலானார்.

அம்மை என்று நினைத்தவுடன் அப்பனுடைய நினை வும் உடன் வருகிறது. மற்ற அம்மையப்பர்களைப் போலவ்ா இவர்கள் இருக்கிறார்கள்? ஏதோ சம்பிரதாயத் .துக்கு, 'உடம்பு இரண்டேயன்றி உயிர் ஒன்றுதான்' என்று சொல்வார்கள். ஆனால் உலக பிதாவும் மாதாவு மாகிய இவர்களுக்கு உடம்புகூட ஒன்றுதான். -