பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகையின் திருக்கோயில்கள் அதே

என்றன் கெஞ்சகமோ?

என்று.பாடினார். இறைவனுடைய வாம பாகம், வேதத் தின் அடி, அதன் முடி, சந்திரன், தாமரை என்று ஐந்து இடங்களைக் கூறி, ஆறாவதாகத் தம் நெஞ்சத்தைச்

சொன்னவர் அதோடு நிறுத்த மனம் வரவில்லை. மன்த்தை அணு என்று சொல்வார்கள். இத்தகைய சிறிய இடத்தில் இருப்பவள் என்பது அவளுடைய கருணையைக்

காட்டும்; பெருமையைக் காட்டாது. இதற்கு முன்

சொன்னவை யாவும் உயர்ந்த இடங்கள். கடைசியில் தாழ்ந்த இடத்தில்ா கொண்டு வந்து நிறுத்துவது என்று எண்ணினார் போலும் ஏழாவதாக,

மறைகின்ற வாரிதியோ?

என்றார். அம்பிகை. பாற்கடலினிடையே வைஷ்ணவி சக்தியாக இருக்கிறாள். பாற்கடலில் முன்பு தேவலோகப் பொருள்களெல்லாம் மறைந்து கிடந்தன. அதனால் அதனை, மறைகின்ற வாரிதி' என்றார். சுதா சமுத்திரத் திணிைைடய அம்மை இருப்பதாகச் சொல்வார்கள். ஆதலின். வாரிதி என்பது அந்த அமுதக் கடலைச் சொல் வதாகவும் கொள்ளலாம். ஸுதா ஸாகர மத்யஸ்தா' என்பது தேவியின் ஆயிர நாமங்களில் ஒன்று. அம்பிகை எழுந்தருளியிருக்கும் பிந்து ஸ்தானத்துக்கே ஸுதா விந்து (அமுதக் கடல்) என்ற பெயர் உண்டு. அதையே குறித்த தாகவும் கொள்ளலாம்.

ஆக, ஏழு இடங்களைச் சொன்னார். இந்த ஏழு இடங்களில்தானா இருக்கிறாள்? அவள் இல்லாத இடமே இல்லை:

அவள் பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிதை கின்ற பரிபூரணானந்த"மாக இருக்கிறாள், அவளுக்குப் அபூர்ணா” என்றே ஒரு திருநாமம் இருக்கிறதே! " *.