பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவும் வண்ணமும் 189:

பங்கயற்க ணரியபரம் பரனுருவே தனக்குரிய

படிவம் ஆகி - இங்கு அயற்கண் அகனுலகம் எண்ணிறந்த சராசரங்கள்

ஈன்றும் தாழாக் - கொங்கை அற்கண் மலர்க்கூந்தற் குமரி' என்பது திருவிளையாடற் புராணம், * * : , , , - . இங்கே மங்கலை என்றதுபோல, சங்கரனார் மனை மங்கலமாம் அவளே (4) என்று பின்னே ஒரு பாடலில் சொல்வார். மழுவார்திரு நெடுமங்கல மகளே (தக்கயாகப்பரணி, 321) என்பார் ஒட்டக்கூத்தர்.

செங்கலசம் முலையாள் என்று அன்னையைக் குழந்தை நினைப்பது போல நினைத்த அன்பருக்கு அம்மையின் மற்றொரு பண்பும் நினைவுக்கு வந்தது. அவள் அன்னை யாக நிற்பதோடு பிறரையும் அன்ன்ையாகக் கொண்டு தான் குழந்தையாகவும் தோன்றி விளையாடுபவள் என்று எண்ணினார். உடனே, - - . . . . . .

மலையாள்

என்றாா. மலைக்கு மகளாக வந்தவள். அல்லவா? பர்லத ராஜனுடைய மகளாக அவதாரம் செய்தமையால் பார்வதி என்ற பெயரைப் பெற்றாள். " வரைராசனுக்கிருகண் மணியா யுதித்துமலை வளர்காதலிப்பெண் உமையே' என்று தாயுமானவர் பாராட்டுவார்.

மலையாள் என்பதற்கு மலையின்மேல் வாழ்பவள் என்றும் பொருள் கொள்ளலாம். பண்டாசுரனை அம்பிகை அழித்து வெற்றிகொண்ட பிறகு லலிதாம்பிகைக்கும் காமேசுவரருக்கும் ஏற்ற வகையில் திருக்கோயில்களை அமைக்க எண்ணினார்கள் தேவர்கள். தெய்வத்தச்ச னாகிய விசுவகர்மாவையும், அவுணத் தச்சனாகிய மயனையும் அழைத்துப் பதினாறு பூரீநகரங்களைச் சமைக்கும்படி சொன்னார்கள். அ ந்தச் சிற்பியர் தலைவர் இருவரும் அப்படியே பதினாறு. நகரங்களை