பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

..,204 அபிராமி அந்தாதி

திருவருளைப் பெறும் முயற்சியிலும் இடைவிடாத ஒருமைப்பாடு இருக்க வேண்டும். அவனுடைய திருவுருவத் தைத் தியானிக்கும் திறத்திலும் ஒரே குறிப்பாக இருந்து பழக வேண்டும்.

தெய்வம் ஒன்றுதான், இயல்பாகக் கடவுளுக்கு நாமமோ ரூபமோ இல்லை. நாமரூபம் இல்லாத பொருளை மனம் பற்றாது. மனம் படைத்த மக்கள் தன்னைத் தியானித்து வழிபட வேண்டும் என்ற கருணை யால் இறைவன் பல வேறு திருவுருவங்களை எடுத்து வருகிறான். அருளாளர்கள் அருட்கண்ணால் அவன் திவ்ய மங்கள வடிவத்தைக் கண்டு இன்புறுகிறார்கள். பல பல வடிவங்கள் இறைவனுக்கு இருந்தாலும், நம் உள்ளம் எந்த வடிவத்தில் பதிகிறதோ அதனையே இடைவிடாமல் தியானிக்க வேண்டும்.

அம்பிகையினிடம் பக்தி பண்ணும் உபாசகன் ஒருவன் எவ்வளவுதான் சிறப்பாகப் பூஜை செய்தாலும் அவன் உள்ளத்தில் அப்பெருமாட்டியின் திருவுருவம் பதியாது. புறத்தே காணும் தரிசனத்துக்குப் பயன் அகத்திலே தியானிப்பதுதான். அப்படித் தியானிக்கும் போது ஒரு குறிப்பிட்ட திருவுருவத்தையே இடைவிடாமல் தியானித் துப் பழகவேண்டும். இன்று ஒன்று, நாளை ஒன்று என்று மாறி மாறி நினைத்தால் எந்தஉருவமும் மனதில் பதியாது எல்லா உருவங்களும் அம்பிகையின் திருவுருவங்களாக இருக்கலாம். ஆனால் அவற்றில் ஏதேனும் ஒன்றை இடை விடாமல் பற்றி உள்ளத்தில் நட்டுக்கொள்ள வேண்டும், புறக்கடையில் எங்கே வெட்டினாலும் தண்ணிர் வரும். ஆனால் மாறி மாறி வெட்டாமல் ஒரு குறிப்பிட்ட இடத் திலே இடைவிடாமல் வெட்டினால்தான் தண்ணிரைக் காண முடியும். அதுபோலவே எம்பெருமாட்டியின் திருக் கோலங்கள் பல இருந்தாலும், அவற்றில் எந்தக் கோலம் நம் உள்ளத்தில் உணர்ச்சியையும் கிளர்ச்சியையும் எழுப்பு கிறதோ, அதைப் பற்றிக் கொள்ள வேண்டும்; இடை