பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருமைப்பாடு 2●5ぶ

விடாமல் தியானம் செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த திருவுருவம் தேசுடைய வடிவமாக மாறித் திவ்விய, மான காட்சியைக் காணும் பேறு கிடைக்கும், -

ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன். ஒன்றேளன் உள்ளத்தின் உள்ளடைத்தேன்' என்று காரைக்காலம்மையார் பாடுகிறார். ஒன்றையே இடைவிடாமல் உள்ளத்தே அடைக்கும் வன்மை யாருக்கு இருக்கிறதோ அவர் அம்பிகையின் திவ்ய தரிசனத்தை, அகக் கண்ணில் கண்டு களிக்கும் நிலையை அடைவார்.

அபிராமிபட்டர் அவ்வாறு அபிராமியின் திருவுரு. வத்தையே எப்போதும் உள்ளத்தே தியானிப்பவர். வேறு. கோலத்தை நினைப்பதில்லை இதனால் மற்றக் கோலங் களைக் கண்டு வெறுப்பதில்லை.

சின்னஞ்சிறு குழந்தை வீட்டிலுள்ள எல்லோரிடமும் தாராளமாகப் பழகுகிறது. யார் எடுத்தாலும் வந்து: விளையாடுகிறது. அவரவர்கள் குழந்தையை அணைத்தும் கொஞ்சியும் முத்தமிட்டும் விளையாடுகிறார்கள். அவ்வ. ளவு பேர்கள் கையிலும் அது தவழ்கிறது. ஆனாலும் பால் குடிக்க வேண்டுமென்றால் அது தன் தாயையே நாடிச் செல்கிறது. பசி வந்துவிட்டால் குழந்தை வேறு எவரை யும் நாடுவதில்லை. மற்றச் சமயங்களில் பிறரோடு. கொஞ்சி விளையாடினாலும், இப்போது அவர்கள் அழைத்தாலும் போவதில்லை. தன் பசியை ஆற்றிக் கொள்ளத் தன் தாயையன்றி வேறு யாரையும் பற்றிப் பயன் இல்லை என்பது அந்தக் குழந்தைக்குத் தெரியும்.

அப்படித்தான் உண்மையான உபாசகன் இருப்பான். அவனுக்குத் தெய்வம் ஒன்றே என்ற உண்மை நன்றாகத் தெரிந்திருக்கும். எல்லா உருவங்களையும் கண்டு வழிபடு வான். ஆனால் தியானம் செய்யும்போது தன் வழிபடு: தேய்வத்தின் கோலத்தில் மனத்தைப் பதிப்பான். அந்ததி.