பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

’216 அபிராமி அந்தாதி

இழையணி சிறப்பிற் பழையோள்' என்று திருமுருகாற்றுபபடையும், 'நீல மேனி வாலிழை'

என்று ஐங்குறுநூறும் அம்மையைப் போற்றுகின்றன. வாலிழை என்றது, மக்களால் இயற்றப்படாமல் அமைந்த தெய்விக அணிகலன்களை, ஏனைய மகளிர் தம்முடைய அழகை மிகுவிக்க அணிகளைப் புனைந்து கொள்வர். அன்னையோ இயல்பாகவே பேரழகு உடையவள். அவ்ஸ் திரிபுரசுந்தரி. -

'அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்வி'

என்று பாடுவார், இவ்வாசிரியர். எம்பிராட்டிக்கு அணி களால் அழகு அமைய வேண்டும் என்பது இல்லை. அதற்கு மாறாக அன்னையின் திருமேனியினால் அணிகள் அழகு பெறுகின்றன. ஆதலின்,

அணியும் அணிக்கு அழகே!

என்று பாடினார்.

இதுகாறும் சொன்ன நயப்பாடுகளெல்லாம் அபிராமி அம்மையின் திருவருளுக்கு ஏங்கி நிற்கும் அன்பர்கள் அநுபவத்தில் அறியும் தன்மையன. அன்னை பலருக்கும் பொதுவான தாய்ாக இருந்தாலும் அவளை அணுகி அன்பு செய்வாருக்குத் தன்னுடைய இனிய கோலத்தைக் காட்டி அருள் புரிகிறாள். தன்னுடைய இனிய கல்யாண குணங் களை நினைக்கச் செய்து மனத்தில் சாந்தத்தை உண்டாக் குகிறாள். அவள் உலகிலுள்ள ஆருயிர்க் கூட்டங்களெல் லாம் தன்னை அடைந்து நலம் பெற வேண்டும் என்னும் பெருங்கருணை உடையவள். அதன் பொருட்.ே நுண்ணி யவற்றினும் நுண்ணிய பொருளாக இருக்கும் அவள் மக்க ளுடைய உள்ளம் கொள்ளும் வகையில் அழகுத் திருத்