பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 அபிராமி அந்தாதி

அதுபோல அன்னையின் பெருமையை உணராத மக்கள் அவளை மதிப்பதில்லை; நோயாகக் கருதுவர் என்றும் ஒரு. பொருள் கொள்ளலாம். - > ベ

ஏதோ ஒரு வகையில் அம்மையைப் பிணியே என்று. சொன்னவர், மனம் ஆற்றாமல் அடுத்து, .

பிணிக்கு மருந்தே! என்கிறார். பொல்லாதவர்களுக்குத் துன்பம் தரும் நோயாகவும் நல்லவர்களுக்கு நோயைத் தீர்க்கும் மருந்: தாகவும் அன்னை உதவுகிறாள். அன்னையை உபாசிக்கிற வர்கள் பல வகையான பிணியினின்றும் விடுதலை பெறு வார்கள். ஸ்ர்வவ்யாதி ப்ரசமணி" என்பது அம்பிகையின் திருநாமங்களுள் ஒன்று. மனிதன் உடம்பில் பல வகை நோய்கள் உண்டாகின்றன. அந்த நேரய்களுக்காவது மருத்துவரைக் கொண்டு பரிகாரம் தேடலாம். நோய் களுக்கு இடமாகிய உடம்பைப் பெறுவதே ஒரு பெரிய நோய் பிறப்பு என்னும் அந்த நோய்க்கு உலகிலுள்ள எந்த மருத்துவரிடமும் மருந்து இல்லை. அம்மையின் அருள் மருந்து ஒன்றினாலேதான் அது தீரும். மருந்தை உட்கொள்ளுகிறவர்களுக்குப் பிணி தீருவதுபோல, எம். பெருமாட்டியின் திருக்கோலத்தை உட்கொண்டு தியானிப்பவர்களுக்குப் பிறவி என்னும் பெரிய பிணி திரும். இந்தக் கருத்தை எண்ணி,

பிணிக்கு மருந்தே!

என்றார். இந்தக் கருத்தைக் குமர குருபர முனிவர் மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழில், -

- 'வெம்பாசம் மருவியபிணிகெட

- மலை தரும் அருமைமருந்தே' 'பிறவிப் பெரும்பிணிக்கோர் மருந்தே'

என்று பாடியுள்ளார். மற்ற எல்லாவற்றையும்விடப் பிறவிப் பிணிக்கு மருந்தாக நிற்கும் இயல்பே சிறந்தது.