பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 330 அபிராமி அந்தாதி

பெற்று. வாழ்கிறார்கள். அன்னை அவர்களுக்குப் பெரு விருந்தை அருளினாள். அவளே பெருவிருந்தாக நின்று அவர்களுக்கு இன்ப வாழ்வை வழங்கினாள்.

அமரர் பெருவிருந்தே!

அமரர் முன்பே ஒரு விருந்து பெற்றவர்கள் பாற்கடலைக் கடைந்து அமுதம் உண்டார்கள். அது பழைய விருந்து. ஆனால் எம்பெருமாட்டியின் திருவருளோ அதைவிடப் பெரியது. அமுதம் உண்டும் அசுரர்களால் விளைந்த இன் னல்களைப் போக்க மாட்டாமல் திண்டாடினார்கள். அமுத விருந்து செய்யாததை அம்மையாகிய பெருவிருந்து செய்தது. அமுதமாகிய பழைய விருந்து சிறு விருந்து. அம்பிகையாகிய புது விருந்து பெரு விருந்து.

விருந்து என்பதற்குப் புதுமை என்றொரு பொருள் -உண்டு. அவர்கள் அம்பிகையினால் வெவ்வேறு நலம் பெற்றும் அவர்கள். அவளை முற்றும் உணர்ந்திலர். அவளுடைய அழகும் பெருமையும் ஒரு காலைக்கு ஒரு கால் புதியனவாகத் தோன்றி வியப்பை அளிக்கின்றன. அம்பி கையை வணங்கித் தியானித்து அன்பு செய்யும் அடியார் கள் அவளை நன்கு உணாந்தவர்கள். அமரர்களோ இன்னல் விளையும்போதெல்லாம் அன்னையை அணுகு பவர்கள். ஒவ்வொரு முறை அணுகும் போதும் வெவ்வேறு புதுமையை அவர்கள் அம்பிகையிடம் காண்கிறார்கள். எல்லாப் புதுமைகளிலும் பெரிய புதுமையாக அம்பிகை நிலவுகிறாள். இந்தக் கருத்தை எண்ணியும் அமரர் பெரு ..விருந்தே' என்று கூறியதாகக் கொள்ளலாம்.

அன்பர்கள் தம்முடைய ஆதரத்தினால் எம்பெரு மாட்டியை எண்ணுகின்ற வகையில் பலபடியாக எண்ணி