பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

அபிராமி அந்தாதி

முன்னர் அது வெளிவருவதற்கு ஏற்ற சிந்தனையும். அது வெளிவந்த பின்னர் அது என்றும் மறவாமல் உள்ளத்தில் நிற்கும் நிலையும் வேண்டும் என்பதைக் கருதி, "எப்போதும் என் சிந்தையுள்ளே நிற்க" என்று கூறியதாகவும் கொள்ளலாம். சிந்தை என்றது சித்தத்தை, ஒன்றைப் பற்றிக் கொண்டு இடைவிடாது திண்ணியதாக இருப்பது அதுவேயாதலின்.

கணபதியின் நிறம் வெண்மையென்றும் சிவப்பென்றும் சொல்வதுண்டு. இங்கே கவிமழை பொழிய எண்ணியவர் ஆதலின், மழை முகிலனைய திருமேனியை உடையவராகத் தியானித்தார்.