பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார் உறவு 229

உத்வியை நாடி அழுது பின்னே திரிவது குழந்தையின் இயல்பு. இங்கே அபிராமிபட்டர் அடியார்களை அண்டி ன்ால் அறிதற்கரிய இரகசியத்தை அறிந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தினால் அவர்கள் பின்னே திரிந்து வழி பட்டார். . -

ரசவாத வித்தை ஒரு பரதேசிக்குத் தெரியும் என்று ஒரு வதந்தி உண்டானால் போதும்; அது உண்மையா, அல்லவா என்று யோசிக்காமல் அவர் பின்னே ஆயிரம் பேர் திரிவார்கள். இந்தப் பிறவி எடுப்பதற்குப் பய்ன் மீட்டும் பிறவியை அடையாமல் செய்துகொள்வதுதான் அந்தப் பெரும்பயனைப் பெறுவதற்கு எத்தனை காலம் அலைந்து திரிந்தாலும் பெரிதன்று. அந்த அருமையை உணர்ந்த அபிராமிபட்டர் அடியார்களின் பின்னே திரிந் தார். - - . -

அவ்வாறு திரிந்து அவர்களைப் போற்றி வழிபட்டத னால் பிறப்பறுக்கும் நிலை உண்டாயிற்று. அடியார்கள் பின்னே திரிந்தவுடனே பிறப்பு அற்றுவிடவில்லை. பிறப் பறுக்கும் வழி இன்னதென்று தெரியவந்தது. பிறப்பறுக் கும் மிருந்தைத் தெரிந்துகொண்டார். அது கிடைத்து விட்டால் பிறப்பு அறுக்கும் நிலை தானே வந்துவிடும். உணவுக்கு வழியின்றி வறுமையினால் உழலும் ஏழைக்குப் பண்ம் கிடைத்தால் அதைக்கொண்டு உணவு பெறுவது எளிதல்லவா? அதுபோன்று பிறப்பை அறுக்க வழி தெரி யாமல் அலைபவனுக்கு அதை நீக்கும் மருந்து கிடைத்தால் அவனுக்கு உடனே பிறப்பு நீங்கிவிட்டது போன்ற இன் பமே உண்டாகும். மருந்தை உண்ணுவது பெரிய காரியம்

பிறவியைவிடப் பெரிய நோய் வேறு இல்லை. மற்ற நோய்கள் உடம்பில் உண்டாகின்றன. நோய்க்கு இட மாகிய உடம்பைப் பெறுவதுதான் பிறவி. அதுவே எல்லா நோய்களிலும் பெரிய நோய். பெரிய நோய்க்கு உரிய மருந்து மிக்கபெருமையை உடையதாக இருக்க