பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிபுர சுந்தரி

39

பவை. இந்த நான்கையும் வைத்திருப்பதனால் நான்கு திருநாமங்கள் அம்பிகைக்கு அமைந்தன. அவை, பஞ்ச தன்மாத்ர ஸாயகா (11), மனேருபேஷு கோதண்டா (10), ராகஸ்வரூப பாசாட்யா (8) க்ரோதாகாராங்கு சோஜ்வலா (9) என்று லலிதா சகசிரநாமத்தில் வருகின்றன:

இந்த நான்கு படைகளும் சிலவற்றைக் குறிக்கும் அடையாளப் பொருள்கள் என்பதை இந்தத் திருநாமங்கள் புலப்படுத்துகின்றன. செங்கரும்பாகிய வில் மனத்தைக் குறிக்கிறது. எண்ணுதலையும், அதனை ஒழிதலையும் உடைய மனத்தையே அம்மை வில்லாக ஏந்தியிருக்கிறாள். மனம் இந்திரியங்களின் வாயிலாக நுகர்ச்சியைப் பெறுகிறது; இந்திரியங்களால் நுகரப்படுபவற்றைப் புலன்கள் என்பார்கள். சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்ற ஐந்தும் ஐம்பொறிகளால் நுகரப்படுவன: இவற்றைத் தன்மாத்திரைகள் என்று வடமொழியில் கூறுவர். இவைகளே அம்பிகையின் திருக்கரத்தில் கணைகளாக உள்ளன,

அம்பிகையின் திருக்கரத்தில் உள்ள அங்குசம்,குரோதம் அல்லது வெறுப்பின் அடையாளம்; ராகம் அல்லது விருப்பின் உருவமாக அமைந்தது பாசம் அல்லது கயிறு. விருப்பு வெறுப்புக்களையே பாசாங்குசமாகத் தரித்தவள் எம்பெருமாட்டி.

இந்த நான்குக்கும் அதிதேவதைகள் உண்டு. பாசத்துக்கு அதிஷ்டான தேவதை அச்வாரூடை; அங்குசத்துக்கு ஸம்பத்கரி: கரும்பு வில்லுக்கு மந்த்ரிணி: மலர்ப் பூங்கனைக்குத் தண்டநாதா என்ற வராகி.

கரும்பு வில்லும் மலர்க்கனையும் உடையவன் காமன்.அவற்றையே அம்பிகையும் கொண்டிருக்கிறாள். செங்கரும்பை வில்லாகவும், தாமரை, மாம்பூ, அசோகமலர்,