பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

பல ஆண்டுகளுக்கு முன் திருப்பனந்தாளில் உள்ள காசி மடத்தின் அதிபர் ஸ்ரீலஸ்ரீ அருணந்தித்தம்பிரான் சுவாமிகள் அவர்கள் அபிராமி அந்தாதிக்கு உரை எழுதிப் பதிப்பிக்கவேண்டும் என்று பணித்தார்கள். அவர்கள் திருஉள்ளப்படியே முதலில் அப்பதிப்பு, காசி மடத்தின் வெளியீடாக வந்தது. பிறகு இரண்டாம் பதிப்பும் வெளி யாயிற்று, மூன்றாம் பதிப்பு அமுத நிலைய வெளியீடாக மலர்ந்தது. அந்த நூலுக்கு உரை எழுதும்பேர்து ஸ்ரீவித்யா சம்பந்தமான நூல்களைப் படித்தும் உபாசகர்களோடு பழகியும் பல செய்திகளைத் தெரிந்துகொண்டேன்.

என்னுடைய ஆசிரியப்பிரானாகிய டாக்டர் மகாமகோபாத்தியாய ஐயரவர்கள் தக்கயாகப் பரணியைப் பதிப்பித்தபோது அம்பிகையின் சம்பந்தமான பல நூல்களைப் படிக்கும் செவ்வி கிடைத்தது. அதன் பின்பு அபிராமியந்தாதிக்கு உரை எழுதுப்போது அந்தத் துறையில் பின்னும் ஆராய்ச்சி செய்யும் அவசியம் உண்டாயிற்று. பிறகு ஸ்ரீ சிருங்ககிரி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகளின் ஆதரவில் 'சங்கரகிருபா' என்ற பத்திரிகையை வெளியிடத் தொடங்கினார்கள்