பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



42

அபிராமி அந்தாதி

இவ்வாறு பாடுகிறார் அபிராமி பட்டர்.

துணையும் தொழும்தெய்வ மும்பெற்ற
தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட
வேரும், பனிமலர்ப்பூங்
கணையும் கருப்பஞ் சிலையும்மென்
பாசாங் குசமும்கையில்
அணையும் திரிபுர சுந்தரி
ஆவது அறிந்தளமே.

(பணை-கிளை. பதிகொண்ட-பதிதலைக் கொண்ட, பனி-குளிர்ச்சி, பூ-பொலிவு. கணை-அம்பு. கரும்பு. சிலை; கருப்பஞ்சிலை; அம், சாரியை, அழகிய என்றும் கொள்ளலாம். சிலை-வில். அணையும்-சார்ந்து விளங்கும், திரிபுரசுந்தரி, துணை முதல் வேர்வரையில் உள்ள பொருள் ஆவதை அறிந்தோம் என்று கூட்டவேண்டும்.)