பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



புகல் அடைந்தேன்

45

"நான் இவளைத் திருமணம் செய்துகொண்டுவிட்டேன்' என்று சொல்ல இயலுமா? அந்தப் படத்தில் உள்ள பெண்னின் பெற்றோரை அணுகிப் பெண்ணையும் கண்டு முயற்சி செய்தால்தான் திருமணம் புரிந்துகொள்ள முடியும்.

திரிபுர சுந்தரியே துணையென்பதைத் தெரிந்து கொண்ட பிறகு அப்பெருமாட்டியின் திருவடியைப் பற்றிக் கொண்டார்.

அறிந்தேன் எவரும் அறியா மறையை,
அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே.

தமக்குத் துணையாக இருப்பவர்கள் தாரம், தமர், மக்கள் என்று எண்ணி உலக இயலில் ஈடுபட்டவர்களுக்கு இந்த இரகசியம் தெரியாது. அம்பிகையே விழுத்துணை என்ற மறையை உணர்பவர்கள் மிக அரியர். அந்த உண்மை எவரும் அறியா மறை. "அந்த இரகசியத்தை அறிந்து கொண்டேன்; அதன்பின் உன்னுடைய திருவடிக்கே சரணமென்று புகல் புகுந்து பொருந்தி னேன்" என்கிறார்.

அறிய வேண்டியதை அறிந்ததற்குப் பயன் அம்பிண்க யின் அடியைச் சார்தல்.

"கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்"

என்று குறள் கேட்கிறதல்லவா?

யாரும் அறியா மறையை அறிந்து அதைப் பயன் படுத்திக்கொண்டார். ஓரிடத்தில் புதையல் இருக்கிற தென்று இரகசியமாக உணர்ந்தவன், உடனே அதை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்குவது போல இவரும் செய்தார். தேவியினது திருவடியே சாரவேண்டிய