பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

அபிராமி அந்ததி

யாகவே இருக்கிறான். சந்திரனோடு அவன் பகையாகிய பாம்பையும் அந்தத் திருமுடியில் காண்கிறோம். நஞ்சை யும் பாம்பையும் அலங்காரப் பொருளாகக் கொள்கிறவன் இறைவன். *

கங்கையும் இறைவன் திருமுடியில் இருக்கிறது. எல்லோருக்கும் துாய்மையைத் தரும் அது பகீரதனுடைய தவத்துக்கு இரங்காமல் அகங்காரத்தால் கோபம் அடைந்தது. அதனால் துய்மை கெட்டது: கலங்கியது. அது தெளிவு பெற்றுப் புனிதத்தை அடையும் வண்ணம் அதைத் தன் சடாபாரத்திலே தேக்கி வைத்துப் பிறகே உலகில் பாயவிட்டான் சிவபெருமான். பிறருக்குப் புனிதம் உண்டாக்கும் கங்கையின் மாசைத் தீர்த்த புனிதன் பரமசிவன், .

புரிசடைமேல் புனலேற்ற புனிதன் தான்காண்'

என்று அப்பர் சுவாமிகள் அருளியிருக்கிறார். இவற்றை எண்ணியே,

கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த புனிதரும்

என்றார். கொன்றையாகிய தூய மலர் விளங்கும் சடையின் மேல் மாசுடைய திங்களையும் பாம்பையும் கங்கையையும் வைத்துப் புனிதமாக்கியருளிய கருணையாளன் சிவபிரான்: அந்தப் பெருமானுடன் அம்பிகை உள்ளத்தே தங்கினால் அது தூய்மை பெறும்,

சிவபெருமானாகிய துணையுடன் கோமளமாகிய அம்பிகை தம் புத்தியில் எந்நாளும் பொருந்தி எழுந்தருளியிருக்க வேண்டும் என்பது அபிராமிபட்டரின் ஆசை.