பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68, அபிராமி அந்தாதி

மந்திரங்களைத் தக்க குருவின் முகமாக உபதேசம் பெற்று ஜபிக்க வேண்டும். அப்படி ஜபிக்கும்போது அந்த அந்த மந்திரத்திற்கு ஏற்ற தியான சுலோகத்தைச் சொல்லி, அப்பால் ஜபம் செய்யவேண்டும். அந்தத் தியான சுலோகத்தில் மந்திரத்தின் தேவதையின் திருவுருவ வர்ணனை இருக்கும். அந்த உருவத்தை மனத்தில் இருத்தி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். இதற்காகவே ஒவ்வொரு மந்திரத் திற்கும் தனித்தனியே தியான சுலோகம் அமைந்திருக்கிறது.

'மந்திரம் என் மனத்தில் மன்னியது' என்று சொல்ல வந்தவர், வெறும் மந்திரம் மட்டும் அன்று; உன்னுடைய உருவத் தியானமும் உடன் செய்கிறேன்' என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்துவதற்கு,


                   சிந்தையுள்ளே 
       மன்னியது உன் திரு மந்திரம் சிந்துர வண்ணப்பெண்ணே!


என்று சேர்த்துச் சொன்னார்.

அம்பிகையின் திருவடியைத் தொழுது அவள் மந்திரத்தை ஜபித்து அவள் திருவுருவத்தைத் தியானித்து. வாழ்வோருக்கு உலகியல் வந்து தாக்கும்போது சற்றே சலனம் உண்டாகலாம். உயர்ந்த இரத்தினத்தைப் பெற்றவன் அதைப் பெட்டியில் வைத்துப் பூட்டுவதோடு வேறு யாரும் அந்தப் பெட்டியை எடுத்துச் செல்லாதபடி பல காவலர்களிடையே அதை வைத்துக் காவல் செய்வான். இங்கே அம்மையின் மந்திரமாகிய மாணிக்கத்தை மனம் என்னும், பெட்டியில் வைத்தவர், அந்தப் பெட்டி உலகியல் வாசனையினால் களவு போகாதபடி அடியார்களினிடையே இருந்து பாதுகாக்கிறார். அவர்கள் எப்போதும் அன்னையையே தியானம்செய்கிறவர்கள். அவர்களுடைய