பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

அபிராமி அந்தாதி

அம்பிகையின் ஆகமங்கள் யாமளம் முதவிய பலவாகும். அறுபத்து நான்கு ஆகமங்கள் என்று ஒரு கணக்கு உண்டு. சதுஷ்ஷஷ்ட்யாதந்த்ரை? என்று செளந்தர்யலகரி கூறுகிறது. மற்ற ஆகமங்களைவிட அம்பிகையின் தந்திர சாத்திரங்கள் மேலானவையாதலின் அவற்றைப் பரமாகமம் என்றார்.

朱 本 率

அம்பிகையின் திருவடித் தாமரையைச் சென்னியிலே வைத்துக் காயத்தால் ஆகும்:வழிபாட்டைச் செய்தார்: அவள் திருமந்திரத்தைச் சிந்தையுள்ளே மன்னச் செய்து மனத்தால் ஆகும் வழிபாட்டைச் செய்தார்; அவள் அடியாருடன் கூடிப் பரமாகம பத்ததியைப் பன்னி வாக்காலாகும் வழிபாட்டைச் செய்தார். இப்படி மனோ வாக்குக் காயங்களாகிய முக்காரணங்கள்ாலும் வழிபாடு புரிந்தார் அபிராமிபட்டர்.

சென்னிய துன்பொற் றிருவடித்
  தாமரை, சிங்தையுள்ளே
மன்னிய துன்திரு மந்திரம்;
  சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின்அடி யாருடன்
  கூடி முறைமுறைய
பன்னிய தென்றும்உன் றன்பர
  மாகம பத்ததியே.

(சிந்துணரத்தைப் போன்ற செவ்வண்ணத் திருமேனி படைத்த இளம் உருவத்தில் எழுந்தருளியிருக்கும் தாயே. அடியேனுடைய தலையின்மேல் இருப்பது உன்னுடைய பொலிவுபெற்ற அழகிய பாதமாகிய தாமரை மலர்: அடியேனுடைய மனத்தில் என்றும் நிலையாக இருப்பது உன்னுடைய தெய்வத்தன்மை பொருந்திய மந்திரம்; உன்னையே தியானித்து வாழும் அடியார்