பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7I

முக்கரண வழிபாடு

களுடன் என்றும் முறையாகப் பாராயணம் செய்பவை உன்னுடைய மேலான ஆகம பத்ததிகளாகும்.

பொன்-பொலிவு. முன்னிய-எண்ணிய, தியானித்த முறை முறையென்றது பலகாலும் பாராயணம் செய்வதைக் குறிப்பது. பன்னுதல்-பலகால் சொல்லுதல்: பன்னியது என்பது தொகுதி.ஒருமை.1 -

மூன்று காரணங்களாலும் அன்னையை வழிபடுவது அடியார்களின் இயல்பு என்பது இதன் கருத்து.

இது அபிராமி அந்தாதியில் 6-ஆவது பாடல்.