பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

அபிராமி அந்தாதி

கமலாலயனும் மதியுறு வேணி மகிழ்நனும்
மாலும் வணங்கி என்றும் துதியுறு சேவடியாய்!

அவளுடைய அடியின் புகழைச் சொல்லும்போது அதைப் பணியும் மூவரையும் பற்றிச் சொல்ல நேர்கிறது. அவளுடைய அடியார்களாக அம்மூவரும் இருக்கிறவர்கள் அல்லவா?

அடி முடியை நாடித் தியானிக்கும் ஆசிரியர் அடியைச் சொன்னவுடன் அம்பிகையின் திருமுகத்தைத் தியானிக்கிறார். அங்கேயுள்ள வண்ணத் திலகத்தை எண்ணுகிறார்; எம்பெருமாட்டி தன் திருதுதலில் சிந்துரத் திலகத்தைப் புனைந்திருக்கிறாள். அந்தச் சிந்துரானனந்தத்தைப் பாடுகிறார். சிந்தூர திலகாஞ்சிதா' (632) என்பது வலிதா சகசிரகாமம்.

சிவந்த அடியையும் செவ்வண்ணத் திலகம் அணிந்த நுதலையும் உடைய பிராட்டியின் திருமேனி முழுவதும் அழகு வெள்ளம் அலை புரண்டோடுகிறது. அதற்கு ஒரு கரை அடியானால் மறு கரை ஆனனம். இரு கரையும் கண்டு இடைப்பட்ட வெள்ளத்தை அளவிடமாட்டாமல், *அழகு வெள்ளமே!' என்று வியப்பில் மூழ்கிச் சுந்தரியே என்று வாயாரச் சொல்லிப் பாட்டை நிறைவு பண்ணு கிறார். -

சிந்துரான்ன சுந்தரியே!

ஸிந்தூரம் என்பது தமிழில் சிந்துரம் என்று வரும். 'சிந்துார திலகத்தையுடைய நெற்றியையுடைய அழகியே!' என்று புகழ்கிறார்.

பிரபஞ்ச அநுபவமாகிய தயிரிலே கிடந்து சுழலும் மத்தாக இருக்கிறது உயிர். அதை எம்பெருமாட்டியின் செளந்தரியப் பெருங்கடலில் கரைத்துவிட எண்ணு கிறவர் போல, அதையும் சொல்லி அவள் அழகையும்