பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
89

திருக்கோலக் காட்சி


கந்தபுராண ஆசிரியர்,

   "ஆதி நாயகன் கருணையாய் அமலமாய் பரம
   போத நீரதாய் இருந்ததன் கொங்கையிற்
      பொழிபால்"

என்று பாராட்டுவார், அம்மையின் பால் இறைவனது கருணை வடிவமாய் இருப்பது; மலம் நீங்கிப் பிறர் மலத்தை நீக்குவது மெய்ஞ்ஞான சொரூபமாக இருப்பது. அதனால்தான் அந்தப் பாலை உண்ட பிரான் திருஞான சம்பந்தர் ஆயினார்.

பேரருள்கூர் திருத்தன பாரமும்.

அம்மையின் தனபாரத்தின் பெருமையை இரண்டு வகையில் சொனனார், அவை இறைவனுடைய அருள் நோக்கினாற் கணிபவை: குழந்தைகளாகிய தொண்டர்களுக்கு ஞானப்பாலை அருத்துபவை. -

அவற்றை எண்ணிக் குழந்தைத் தன்மையை மேற்கொண்ட ஆசிரியர் அவற்றின் மேலுள்ள முத்துமாலையைத் தியானிக்கிறார்.

திருத்தனபாரமும ஆரமும்.

ரத்னக்ரைவேய சிந்தாகலோல முக்தாபலான்விதா' என்ற திருநாமம் முத்துமாலை அசைவதைச் சொல்கிறது. 'அணிவது வெண்முத்து மாலை', 'முத்துவடங் கொண்ட கொங்கை', 'பென்னம் பெரிய முலையும் முத்தாரமும், "முலைமேல் முத்து மாலையுமே (37, 42, 53, 85) என்று பல இடங்களில் முத்து மாலையை இவ்வாசிரியர் பாராட்டுவார். இதனை தக்கயாகப்பரணி உரையாசிரியர் சொல்வார் (106, உரை)

திருமார்பிலுள்ள நகில்களையும் முத்துமாலையையும் எண்ணிய ஆசிரியர் திருக்கரங்களை நினைவு கூர்கிறார்.