பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13


அவை விடுதலையுணர்வோடு அங்கும் இங்கும் ஓடின. உணவைத் தேடின. பசித்தபோது உண்டன. தூக்கம் வந்த போது புதர்களில் பதுங்கின. இன்பமாக வாழ்ந்தன.

நான்காவது முயல்குட்டியும் காட்டுக்குள் ஓடியது. பாப்பாத்திப் பூச்சிகளையும், வெட்டுக்கிளிகளையும் துரத்தி விளையாடியது. பசி வந்தது. சில பச்சை இலைகளைக் கொரித்துத்தின்றது. அவை நச்சுத் தன்மையுள்ளவை. வயிற்றில் இறங்கியவுடன் குட்டி முயல் மயங்கி விழுந்தது. மயக்கம் தெளிந்து அது எழுவதற்கு முன் ஒர் ஒநாய் அந்த வழியாக வந்தது. லபக்கென்று அதை விழுங்கியது.

அவ்வளவு தான் அதன் கதை முடிந்தது.

பொறுப்பற்றவர்களின் வாழ்க்கை.பொசுக்கென்று போய்விடும் என்பதற்கு அந்தக் குட்டி முயலின் வாழ்க்கை ஒர் எடுத்துக்காட்டு.