பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

தாண்டி, ஊரைத்தாண்டி, கடலைத்தாண்டி அப்படி துள்ளித் துள்ளித் ஒடிக் கொண்டிருந்தது.

அது எந்த நேரம் தலை நிமிர்ந்து பார்த்தாலும் கதிரவன் அதன் தலைக்கு மேலேயே காட்சி தந்தான். அது எவ்வளவு நேரம் ஒடியும் பொழுது சாயவே இல்லை.

பொழுது சாய்வதற்குள் உலகத்தைச் சுற்றி வந்து விடவேண்டும் என்று அது திட்ட மிட்டது. ஆனால் அது எவ்வளவு நேரம் ஒடியும் பொழுது சாயவே இல்லை.

சிவபெருமான் கதிரவனைப் போல் அந்த முயலும் விரைந்து செல்ல அருள் புரிந்ததால் அது எப்பொழுது பார்த்தாலும் தலைக்கு மேல் இருக்கும் கதிரவனே தோன்றியது.

சரியாக இருபத்து நான்கு மணி நேரம் மேற்கு நோக்கியே சென்ற முயல் தான் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தது. அப்பொழுது பந்தயம் நடந்த இடத்தில் யாரும் இல்லை. அந்த வெட்டவெளியானது வெறும் மொட்டை வெளியாகக் காட்சி தந்தது. கூடியிருந்த விலங்குகள் கொரித்துச் தின்ற கடலைத் தோல்களும் பறித்துத் தின்ற வாழைப்பழத் தோல்களும் அங்கங்கே சிதறிக் கிடந்தன.

புலிகளும், எருதுகளும் நடத்திய போராட்டக் காட்சிகளில் வழிந்த குருதி திட்டுத் திட்டாய் உறைந்து கிடந்தது.