பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
69


"தூதரே உங்கள் பேச்சில் உண்மை இருக்கிறது. உங்கள் கருத்துப் படியே நான் நடக்க விரும்புகிறேன். அடுத்த காட்டு அரசனுக்கு என்னை நண்பனாக்குவதை நான் வரவேற்கிறேன்" என்று கிழட்டுச்சிங்கம் கூறியது.

அடுத்த நாள் மாலையில் ஒர் ஆலமரத்தடிக்கு வந்திருக்கும் படியும் அந்த மரத்தடிக்கு அடுத்த காட்டு அரசனை அழைத்து வருவதாகவும் சொல்லி விட்டு முயல் அங்கிருந்து கிளம்பியது. .

அந்தக் கிழட்டுச் சிங்கம் நட்புக்கொள்ள வருகிற செய்தியை அப்பொழுதே சென்று தன் அரசனிடம் கூறியது சின்னமுயல். சென்ற இரண்டு மணி நேரத் திற்குள் சொன்னபடி ஒரு நல்ல முடிவை வந்து சொன்ன முயலின் மீது சிங்கத்திற்குப் பெரும் மதிப்பு ஏற்பட்டது. .

மறுநாள் கிழட்டுச்சிங்கத்துடன் அன்புடன் நட்புக் கொண்டு உறவாடி விட்டு மகிழ்ச்சியோடு திரும்பியது சிங்கஅரசன். அதன் அரசாங்கத்தில் அந்தச் சின்ன முயல் தலைமை அமைச்சராகி விட்டது.

ஒரு பெரிய போரைத் தன் திறமையால் நிறுத்தி வைத்த அந்தக் குட்டி முயலைப் பற்றிக் கேள்விப்பட்டு இரண்டும் காட்டிலும் இருந்த விலங்குகள் எல்லாம் அந்த முயலைப் போற்றிப் பாராட்டின. -

சின்ன உருவம் இருந்தாலும் ஒரு பெரிய செயலைச் செய்து முடித்த பெருமை அந்த முயலை அந்தக் காட்டுக்கே பெரிய தலைவனாக்கி விட்டது.