பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவடிக் காட்சி 95.

தன்னை உணர்வாருக்கும் உணராதாருக்கும் அவனே எல். லாம் வழங்கும் நாயகனுக இருக்கிருன். உலகிலுள்ள நாய கர்கள் சில காலம் தம் தலைமைப் பதவியில் இருப்பார்கள்; பிறகு மாறி விடுவார்கள். இந்திரன் முதலிய தேவர்களும் அத்தகையவர்களே. என்றும் மாருமல் எல்லாருக்கும் நாத கை இருப்பவன் அவனே.

காதனே!

எல்லாப் பொருள்களுக்கும் ஆதி காரணணுய், யாவருக், கும் முதல்வனுய், தனித் தலைமை தாங்குபவன் அவன்.

'அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி

பகவன் முதற்றே உலகு"

என்பது முதற் குறள். ஆதிமூர்த்தியாக என்றும் அவன் இருக் கிருன். யாவரும் மறைந்தாலும் எல்லாவற்றையும் தோற்று. விக்கும் ஆதிப் பரம்பொருளாகிய அவன் மறைவதில்லை. -

ஆதி மூர்த்தி! அவன் என்றும் அடியவர்கள் பங்கில் இருந்து நலம் செய் கிறவன்; அவர்களுடைய முயற்சிகளையெல்லாம் நிறைவுறச் செய்து அவர்களுக்குப் பரமோபகாரியாக விளங்குபவன்.

பங்கனே!

அவன் யோகியைப் போன்ற கோலம் பூண்டவன். யோகி யர்களுக்கெல்லாம் மேலான யோகியாக இருப்பவன்.

பரம யோகி:

இவற்றையெல்லாம் நினைந்து வழிபடுகிருர்கள் அன்பர் கள்; பல்காலும் இப்படிச் சொல்லி மனம் உருகி நிற்கிருர்கள்; ஒவ்வொரு நாளும் எது செய்தாலும் செய்யாவிட்டாலும் இவ் வாறு அவன் இயல்பை எண்ணி வாயாரப் புகழ்வதை நிறுத்த,

மாட்டார்கள்.