பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. ஆ லந்து போனேன்’

இந்த உடம்பு தோல் போர்த்து நின்று பளபளக்கிறது. அழகான உடம்பைப் பார்த்தால் நாம் அந்த அழகில் ஈடுபடு கிருேம், அழகானவர்கள் தம்முடைய உடம்பைப் பார்த்துத் தாமே பெருமை அடைவதுண்டு. உள்ளே ஊனும் குருதியும் எலும்பும் வைத்து அவை தெரியாமல் தோலால் மூடியிருக்கும் பண்டம் இந்த உடம்பு. இது பல காலம் நில்லாதது. இதில் உள்ள உறுப்புக்களும் உடம்போடே அழியக் கூடியவை. பொய்யான தோலினுல் செறித்து வைத்திருக்கப்பட்ட இந்தச் சரீரம் நோய்வாய்ப் படும்போது பக்கம் பக்கமாக அழுகி. வீழ்ந்து விடும். அப்படி அழிந்து போகும் உடலில் எவ்வளவு நாள் வாழ முடியும்? இந்த உடம்பில் வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா? எந்தச் சமயத்தில் இடிந்து விழுமோ என்று அஞ்சும் படி சிதைந்துள்ள வீட்டில் நிலையாக வாழ முடியுமா? இந்த மெய்யில், உடம்பில்,வாழ்வதை நாம் விரும்புகிருேம். ஞானிகள் இதைப் பொல்லாப் புலைமலிந்த கூடென்று அருவருப்படை வார்கள். இந்தத் தேகத்தை உடையவளுய் நான் வாழ மாட்டேன்’ என்று அப்பர் சுவாமிகள் சொல்கிருர்.

பொய்யிஞல் மிடைத்த போர்வை

புரை புரை அழுகி வீழ மெய்யளுய் வாழமாட்டேன்.

சிலகாலம் வாழ்ந்தாலும் அந்தக் காலத்திலாவது நன்மை உண்டாகிறதா? நமக்கு உறுதி பயக்கும் எதையாவது நாம் செய்ய விரும்பினுல் நம் உடம்பிலுள்ள ஐம்பொறிகளும் அந்த விருட்பம் கைகூடாமல் நம்மை எங்கெங்கோ இழுத்துச் சென்று விடுகின்றன. பூஜை செய்ய எண்ணி உட்கார்ந்தால் நம் முடைய இந்திரியங்களும் உறுப்புக்களும் அதிலே ஒன்ருமல் தம் போக்கிலே போய்க் கொண்டிருக்கின்றன.