பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலந்து போனேன் 161 இருக்கிருர்கள். அவர்களைப் பார்த்தால் அவர்களும் இந்த ஐவரால் அலைக்கப்பட்டு உழல்கிருர்கள். அப்படியால்ை என்ன சென்னது? இறைவன் திருவடியைத் தரிசிக்க வேண்டும் என்ற ஏக்கம் அவரிடம் ஒரு காலைக்கு ஒரு கால் மிகுதியாகி வந்தது.

கடைசியில் யாருடைய சேவடியைக் காண ஆசைப்பட் டாரோ அவரிடத்திலே முறையிட்டுக் கொள்வதே சரி என்று தீர்மானித்தார். ஐயனே, உன் திருவடியைக் காணும் பொருட்டு நான் செயலிழந்து அலந்து போய்விட்டேன். அதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே, திதான் என் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்” என்று புலம்பினுள்.

பொய்யினுல் மிடைந்த போர்வை

புரைபுரை அழுகி வீழ மெய்யகுய் வாழ மாட்டேன்;

வேண்டிற்றுஒன்று ஐவர் வேண்டார்: செய்யதா மரைகள் அன்ன - சேவடி இரண்டும் காண்பான் ஐய, கான் அலங்து போனேன்,

அதிகைவி ரட்ட னிரே.

  • ஐயனே, அதிகைவீரட்டத்தில் எழுந்தருளிய பெருமானே, நிலையாமை யென்னும் பொய்யில்ை செறிந்த உடம்பின் தோலாகிய போர்வை, பக்கம் பக்கமாக அழுகி வீழும்படியாக, இந்த உடம்பை உடையவனாய் வாழும் ஆற்றல் இல்லேன்; நான் எதை வேண்டுகின்றேனே அந்த ஒன்றை இந்த உடம் பிலுள்ள ஐம்பொறிகள் விரும்புவதில்லை. சிவந்த தாமரைகளைப் போன்ற நின் செம்மையான திருவடிகள் இரண்டையும் தரிசனம் செய்வதற்கு நான் துன்புற்றுச் செயலிழந்து போனேன்."

தே-7