பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#02 அப்பர் தேவார அமுது

(மிடைந்த-செறிந்த, முடைந்த எனலும் ஆம். போர்வை என்றது தோலை. புரை-பக்கம். மெய்யனாய் - உடம்பை உடையவனுய். மாட்டேன்-ஆற்றல் இல்லேன். ஐவர்-ஐம் பொறிகள்; தொகைக் குறிப்புச் சொல்; உயர்திணையாகச் சொன்னது இழிவுக் குறிப்பு. செய்ய தாமரை-செந்தாமரை, வயல்களில் அலரும் தாமரை என்றும் கொள்ளலாம். காண் பான்-காணும்பொருட்டு. அலத்தல்-துன்புற்று ஏங்கி நிற்றல். வீரட்டனுர் என்பதன் முன்னிலை விரட்டனிர் என்பது. ஏ.-விளி 叫@H·A

இந்திரியங்களின் போக்கிலே செல்பவர்களுக்கு இறைவன் திருவருள் கிட்டாது என்ற கருத்து இதல்ை புலப்படுகிறது.

நான்காம் திருமுறையில் 26-ஆம் திருப்பதிகத்தில் வரும் இரண்டாவது பாட்டு இது.