பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#04 அப்பர் தேவார அமுது

புறக்கண்ணைக் கொண்டு உலகத்திலுள்ள பொருள்களைப் பார்த்து மகிழ்ந்தும், அவற்றைப் பெற வேண்டுமென்று ஆசைப்பட்டும், அவற்றைப் பெற முயன்றும், அவற்ருல் வரும் நிலையற்ற இன்பத்திலே மயங்கியும் நாம் வாழ்கிருேம். இந்த ஊனக் கண்ணுல் பார்க்கும் பார்வையன்றி ஞானக் கண்ணுல் பார்க்கும் பார்வை நமக்கு இல்லை.

'முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள்,

அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்” - என்று திருமூலர் பாடுவார். அந்த அகக் கண் நமக்கு மூடிக் கிடக்கிறது. ஞானம் என்னும் இமையைத் திறந்து அகக் கண்ணுல் பார்க்கும் ஞானப் பார்வையை நாம் பெறவில்லை. அப்பர் சுவாமிகளும் அப்படி இருந்ததாகச் சொல்கிருர்.

ஊன் கண் கோக்கி, -

உணர்வு எனும் இமை திறந்து விழித்திலேன்.

- 'ஊனக் கண்ணினுல் நோக்கினேனே அன்றி உணர்வாகிய ஞானக் கண்ணுல் நோக்கவில்லை என்கிருர். ஞானக்கண்ணுல் பார்க்கிறவர்களுக்கு எல்லாம் இறைவன் மயமாகத் தோன்றும். -

நாம் அறிவென்னும் செம்மையின்றி அறியாமை யென்னும் வெளிறு தோன்ற நிற்கிருேம். இதல்ை தக்கது. இன்னது, தகாதது இன்னது என்று பகுத்து அறியும் ஆற்றல் இல்லாமல் போகிருேம்; அதல்ை மேலும் மேலும் பாவங்களை ஈட்டுகிருேம். . • ,

நல்ல வியாபாரிகள் சரக்குக் கொள்ளப் போனல் அவற்றின் தரத்தை ஆராய்ந்து நல்லவற்றையே தேர்ந் தெடுப்பார்கள். வியாபார நுட்பம் அறியாதவர்கள் வியாபாரம் செய்யப் புகுந்தால் கண்ட கண்ட சரக்குகளையெல்லால் வாங்கு வார்கள். நாம் நம் அறியாமை தோன்றும்படி பாவம் என்னும் சரக்கையே ஈட்டிக்கொள்கிருேம். அறிவு இருந்தால்,