பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6.

அப்பர் தேவார அமுது


களைச் சாதிக்கிறான். மண்ணை வசப்படுத்தினவனவிட நீரை வசப்படுத்தினவன் அதிக ஆற்றல் பெறுகிறன். இப்படியே பஞ்சபூதங்களையும் வசப்படுத்தியவன் பேராற்றல் பெற்றுப் பல பல செயற்கரும் செயல்களைச் செய்கிறான்.

உலகில் உள்ள பஞ்ச பூதங்களை வசப்படுத்துவதனால் இவ்வளவு அரிய செயல்களைச் செய்யும் ஆற்றல் பெற்றவன், மிக்க வலிமை பெறுகிறான். எல்லாப் பொருள்களையும் தன்வசப் படுத்தி ஆளும் வகை தெரிந்த மனிதன் உலகில் மற்ற எல்லாப் பிராணிகளைவிடவும் சிறந்தவனாக விளங்குகிறான். சாமான்ய மனிதனைவிட அறிவு மிக்கவன் அந்த அறிவாற்றலால் அவனை விடச் சிறந்த செயல்களைச் செய்ய முடிகிறது.

இப்படிப் பூதங்களையும் பிற பொருள்களையும் வசப்படுத்தி அற்புதங்களை ஆற்றும் மனிதன் இவற்றை விடப் பெரிய அற்புதத்தைச் செய்யும் இயல்பும் பெற்றிருக்கிறான். ஆனல் அந்தத் துறையில் பெரும்பாலோர் ஈடுபடுவதில்லை.

எல்லாப் பொருள்களையும்விடச் சிறந்த பொருள் எதுவோ அதற்குப் பரம்பொருள் என்று பெயர். பரப்பிரமம், கடவுள். தெய்வம் என்று பொதுவகையாகவும், சிவபெருமான் திருமால், அன்னை பராசக்தி, முருகன் என்று சிறப்பு வகையாகவும் அந்தப் பரம்பொருளைக் கூறுவார்கள்.

அந்த மேலான பொருளோடு தம்முடைய முயற்சியால் - தொடர்பு பெற்றவர்கள் எல்லாவற்றையும் விடப் பெரிய அற்புதத்தைச் செய்ய வல்லவராகிறார்கள்.

எவ்வளவு வல்லமை பெற்றவராக இருந்தாலும் இந்த வாழ்வின் இறுதியில் இறந்து போகிறார்கள். அற்புதங்களைச் சாதித்த விஞ்ஞானியும் மரணத்தை வெல்ல முடிவதில்லை. மரணத்தை எண்ணும்போது யாவருமே அஞ்சுகிறார்கள்.

பணத்தைப் பெற்றவன் வறுமைக்கு அஞ்சுவதில்லை. அறிவை உடையவன் அறியாமைக்கு அஞ்சுவதில்லை. உடல்