பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயர்த்துப் போனேன் 107

பார்க்கும் ஆற்றல் எனக்கு இல்லாமல் போயிற்று. ஞானம் வந்தால் அகக் கண்ணின் இமை மூடிக் கிடக்காமல் திறக்கும்; மெய்ஞ்ஞானப் பார்வை உண்டாகும். அவ்வாறு இல்லாமல் அயர்த்துப் போய் நிற்கிறேன் என்று இரங்குகிருர் திருநாவுக் 高Jr字T,

கழித்திலேன் காம வெங்கோய்; காதன்மை, என்னும் பாசம்

ஒழித்திலேன், ஊன்கண் நோக்கி

- உணர்வுஎனும் விழிதி றந்து

விழித்திலேன்; வெளிறு தோன்ற

வினேன்னும் சரக்குக் கொண்டேன்;

அழித்திலேன், அயர்த்துப் போனேன்:

அதிகைவி சட்ட வீரே.

  • திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளிய எம்பெருமானே, காமம் என்னும் கொடிய நோயை நான் விடவில்லை; ஆசை என்னும் பாசத்தை ஒழித்து விடவில்லை; ஞானம் என்னும் அகக் கண்ணின் இமையைத் திறந்து விழித்துப் பார்க்கவில்லை; அறியாமை தோன்றும்படி புதிய வினைகளாகிய சரக்கை ஈட்டிக் கொண்டேன்; அவற்றை அழித்தேன் இல்லை. இப் போது எந்த வழியும் தெரியாமல் செயலொழிந்து அயர்ந்து போய் நிற்கிறேன், !

(வெந்நோய்-போக்கலாகாக் கொடுமையை உடைய நோய்; அசாத்திய வியாதி என்பர். காதன்மை ஆசையாகிய தன்மை. பாசம் - பற்று. ஊண்கண் - உடலிலுள்ள புறக்கண். உண்ர்வு - ஞானம். இமை - ஞானக் கண்ணின் இமை; முதலுக்குரிய செயலைச் சினைக்குரியதாகச் சொல்வது மரபு; என் கை இளைத்ததோ? என்று சொல்வது போலவும், தலைக்கு ஒரு காசு பெற்ருர்’ என்று சொல்வது போலவும் அமைந்தது. இது. விழித்திலேன் - உண்முக விழிப்பைப் பெற்றிலேன். வெளிறு - ஒன்றும் இல்லாத வெறுமை; இங்கே அறியாமை;