பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐவரோடும் வைத்தார் Í 13T

சென்று அலையும் இயல்புடையது. இந்த இயல்பை மாற்றிச் சித்த விருத்திகளை அடக்கி மனத்தைப் பளிங்குபோல வைக்கும் அன்பர்கள் உள்ளத்தே அவர் வருவார். அவ்வாறு உள்ளத் தைத் திருத்துவதையே யோகம் என்று சொல்வர்.

யோக சித்தி வ்ருத்தி நிரோத:

என்பது யோக சூத்திரம். இந்த யோகம் கைவரப் பெற்றவர் களுக்கல்லாமல் அவருடைய அகமுகக் காட்சி கிடைக்காது.

காணிலார் கருத்தில் வாரார்;

திருத்தலார் பொருத்தல் ஆகார்.

மனத்தைத் திருத்தமாக வைக்கும் ஆற்றலில்லாதவர்கள் எவ்வளவு முயன்று வருந்தினுலும் தம்முடைய உள்ளத்தில் அவரைப் பொருத்தியிருக்கும்படி செய்ய முடியாது. .

இறைவருக்குப் பல வடிவங்கள் உண்டு. எல்லா வடிவங். களையும் எண்ணித் தியானம் செய்வதென்பது இயலாத காரியம். அவருடைய வடிவங்கள் எல்லாவற்றையும் நினைக்க முடியாது. நம் மனத்தில் பதியும் வகையில் எந்தத் திருவுருவம் இருக்கிறதோ அதையே மீட்டும் மீட்டும் தியானித்து உள்ளத் தில் பொருத்திக்கொள்ள வேண்டும். -

அவர் எல்லையிறந்தவராதலின் அவரை முழுவதும் நம் உள்ளத்தில் அடக்க முடியாது.

ஏண் இலார். (ஏண்-எல்லை.) காவிரியில் நீராடி அதன் நீரை எடுத்து வருகிறவர்கள் காவிரி நீர் முழுவதையும் கொண்டு வருவது என்பது சாத்திய மன்று, தாம் கொண்டு சென்ற பாத்திரத்தை நிரப்பிக் கொண்டு வரலாம். அப்படியே, எல்லேயிறந்த அவரை முழு வதும் உள்ளத்தே அடைத்து விடுவது என்பது யாராலும் முடியாத காரியம். நம் மனம் முழுவதும் அவர் வடிவம்