பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 #4 அப்பர் தேவார அமுது

நிரம்பி நிற்க, வேறு எண்ணங்களே எழாமல் செய்து விட லாம்,

அந்தப் பெருமான் அருள் கிடைத்து விட்டால் நமக்கு இறப்பும் பிறப்பும் இல்லாத பேரின்ப வாழ்வு கிடைக்கும். அவர் இறப்பும் இல்லாதவர்; பிறப்பும் இல்லாதவர்.

இறப்பும் இல்லார், பிறப்பு இலார்.

அன்பர்கள் அவரை மறந்து வாழமாட்டார்கள். பல காலம் எண்ணி எண்ணிப் பயின்றவர்களாதலின் அவர்களால் அவரை மறக்க முடியாது. அவர்களால் அவரைத் துறந்து வாழ முடியாது. அவர்கள் துறக்க எண்ணினுலும் அவர் களுடைய அன்பிலே கட்டுப்பட்ட பெருமான் துறக்கமாட்

爆_茹*顶”。

துறக்கல் ஆகார்.

நம்மிடம் ஐந்து பொறிகளே வைத்திருக்கிருர். இந்தப் பஞ்சேந்திரியங்களும் வெவ்வேறு திசையில் நம்மை இழுத் தடிக்கின்றன. ஒரு முறை ஒரு பொருளை அவாவி நுகர்ந்து அதல்ை இன்பம் சிறிது நேரம் கிடைக்கும், பிறகு அது துன் பத்தையே தருவது நம் அநுபவம். தூண்டிற் புழுவை விரும்பி அதை உண்ணப் போய்த் தூண்டில் முள்ளில் மாட்டிக் கொள்ளும் மீன்களைப் போல அல்லற்படுகிருேம். இந்திரிய சுகங்கள் எல்லாம் முதலில் இன்பம் தருவன போல இருந் தாலும், நம்மை உலகியலிலே மாட்ட வைத்து, அவாவை அதிகமாக்கி, மீட்டும் மீட்டும் பிறந்தும் இறந்தும் திரியும்படி வைத்துவிடும். ஒரு முறை துன்பம் பெற்ருேமே என்று எண் ணுமல், அப்போது பெற்ற தோல்விக்கு நாணுமல், மீட்டும் மீட்டும் அவற்றை அவாவிச் செல்லும் இயல்புடையவை நம்முடைய பொறிகள். அவற்ருேடு கலந்து நாம் வாழ்கிருேம். அவற்றை அடக்கி நம் வசப்படுத்தாவிட்டால் அவை நம்மை அடக்கித் தம்வசம் ஆக்கிவிடும். அவ்வாறு நம்மோடு கலந்து