பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐவரோடும் வைத்தார் 117 வந்து நிற்கமாட்டார். தம் உள்ளத்தைத் திருத்தும் ஆற்றல் இல்லாதவர்கள் பொருத்திக் கொள்ள ஆகாதவர் ; முன்னைய அநுபவத்தால் துன்புற்ருலும், பழிபாவம் வருமே என்னும் நாணம் இல்லாத ஐந்து பொறிகளோடும் என்ன இட்டு வைத்து அவற்ருேடு கலசி அல்லற்பட வைத்தார்; அவர் ஆண் அல்லாதவர்; பெண்ணும் அல்லாதவர்." -

(காணிலார் - தரிசிக்காதவர்கள்; காண் - காணுதல்; முதல்நிலைத் தொழிற்பெயர். திருத்தலார்-திருத்தும் செயல் இல்லாதவர்கள் ; உள்ளத்தைத் திருத்தித் தூய்மை செய்யா தவர்கள். பொருத்தல்-உள்ளத்தே பொருந்தியிருக்கச் செய் தல். பொருத்தல் ஆகார்-பொருத்த முடியாதவர். ஏண்எல்லை. இறப்பும்: உம்மை எதிரது தjஇய எச்சவும்மை; பிறப்பும் இலார் என்ற உம்மை தொக்கது. நாண்-முன்பு பட்ட அநுபவங்கள் துன்பத்திலே ஆழ்த்திவிட்டனவே, இனி அத்தகைய செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற நாணம், ஐவர்-ஐம்பொறிகள்; தொகைக் குறிப்புச் சொல், உயர்திணை யாகச் சொன்னது இழிவுக் குறிப்பு. இட்டு-என் வசமின்றி என் வினைக்கு ஈடாக இட்டு வைத்து; குற்றம் செய்தவரைப் பிற குற்றவாளிகளோடு சேர்த்துச் சிறையில் இட்டு வைத்தது. போல வைத்தார் என்றபடி, விரவி-விரவ; எச்சத்திரிபு. ஐவ ரோடும் ஈடுபட்டு நான் பொறிகளினின்றும் வேறுபட்டவன் என்பதை உணராமல் அவரோடு ஒட்டிக் கிடக்கச் செய்தார். பெண்ணும்; உம்மை, இறந்தது தழீஇய எச்சம். அதிகை வீரட் டனுர்: எழுவாய்.)

இறைவரைத் தரிசித்துத் தியானம் செய்து வழிபட்டால் பஞ்சேத்திரியங்களை வென்று இறப்பும் பிறப்பும் இல்லாத பேரின்ப வாழ்வைப் பெறலாம் என்ற கருத்துக் குறிப்பாற் பெறப்பட்டது.

இது நான்காம் திருமுறையில் 27-ஆம் பதிகத்தில் உள்ள 8-ஆவது திருப்பாட்டு. -