பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீறுடை அழகர் - 119

அவர். அவர் எவ்வளவு அளவுடையவரோ, அவ்வளவு அளவில் அவருடைய அருள் நிரம்பி நிற்கும் உமாதேவியை ஒரு பாதியாகப் பங்கில் வைத்த திருமேனியை உடையவர் அவர். அந்தக் கோலம் அவர் முழுக்க முழுக்க அருள்வடி வானவர் என்பதைக் காட்டும்.

கூறுடை மெய்யர் போலும்.

'பாம்பு என்ருல் படையும் நடுங்கும்’ என்பது பழமொழி. பாம்பு என்று சொன்னுலே நமக்கு அச்சம் உண்டாகிறது. நேரில் பார்த்தால் நடுங்குகிருேம். நம் பக்கத்தில் வந்து விட் டால் ஒடிப் போகிருேம். ஆனால் அவரோ கொலை செய்யும் பாம்பை அணிகலகைப் பூண்டிருக்கிருர், அரையில் அரை ஞாணுகக் கட்டியிருக்கிருர், நஞ்சு கக்கும் பாம்பு அவரிடத்தில் அடங்கி ஒடுங்கி அவருக்கு அணிகலனுக இருக்கிறது. நம் முடைய இந்திரியங்களென்னும் ஐந்து தலைகளையுடைய பாம்பு நம் மனம், இது அவா என்னும் நஞ்சைக் கக்குகிறது. அதனல் மேலும் மேலும் பிறந்தும் உழன்றும் இறந்தும் வருகிருேம். இந்த மனத்தையும் ஐம்பொறிகளையும் அவரோடு இணைத்து விட்டால்; அவருடைய வழிபாட்டில் ஈடுபடச் செய்துவிட்டால், இந்த ஐந்து தலைநாகம் நம்மை ஒன்றும் செய்யாமல் நமக்கு அடங்கி ஒடுங்கி நிற்கும். இதை அச்சத்துடன் பற்றிக்கொண்டு வாழும் நிலை மாறி, நம் விருப்பம் போல இது செயற்படும்.

கோள் அரவு அரையார் போலும் அவருடைய திருமேனியைப் பாருங்கள். முழுதும் திருநீறு பூசியிருக்கிருர். அவருடைய செம்பவளத் திருமேனியில் அந்த நீறு படர்ந்து அழகை மிகுதிப்படுத்துகிறது. பெண்கள் தங்கள் முகத்துக்கு மணமுடைய பொடி பூசி அழகு செய்து கொள் கிருர்கள். இறைவருக்கு இந்தத் திருநீறே அழகு செய்கிறது.

நீறுடை அழகர் போலும். - இத்தகைய பெருமானைத்தான் இந்தத் திருச்செம்பொன் பள்ளியில் தரிசிக்கிருேம். இந்தத் தலமே இறைவர் அருளாக