பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 அப்பர் தேவார அமுது

(ஆறு கங்கையாறு, கூறு- உமாதேவிக்கு அளித்த ஒரு கூறு ஒழிந்த மற்றைக் கூறு; வலப்பாகம். கோள். கொலை. அரையில் நாணுகவும் கோவணமாகவும் பாம்பை அணிந்தவர். இயல்பாகவே அழகர் அவரைச் சேர்ந்து நீறும் அழகு பெறு கிறது: அந்த நீற்ருல் அவர் மேனியும் அழகு மிக்குத் தோன்று கிறது. நெய்தலே: ஏகாரம், பிரிநிலை; அசையுமாம். நீர்மைஇயல்பு. நீர்மைச் சேறு. நீரின் தன்மையோடு இணைந்த சேறு என்றும் பொருள் கொள்ளலாம். சேறுடை சேற்றைத் தான் தோற்றும் இடமாக உடைய; இது கமலத்துக்கு அடை, வேலி -எல்லை. திருச்செம்பொன் பள்ளியை அணுகும் போதே நெய் தல் மணம் கமழும், அப்பால் கமல மலர்கள் காட்சி அளிக்கும். ஊருக்குள் சென்று திருக்கோயிலில் புகுந்தால் இறைவர் ஆறுடைச் சடையராகவும்,அன்பருக்கு அன்பராகவும், கூறுடை மெய்யராகவும், கோளரவரையராகவும், நீறுடையழகராகவும் தரிசனம் தருவார். சடை, மெய், அரை, திருமேனியழகு ஆகி யவை அவர் திருக்கோலத்தை இனம் காட்டுபவை. அன் பருக்கு அன்பு வைக்கும் திறம் அவர் கருணையைக் காட்டுவது.

போலும் என வருபவை யாவும் அசைகள். நெய்தலே, செம்பொன் பள்ளியாரே ஏகாரங்கள் அசை, திருச் செம்பொன் பள்ளியார் எழுவாய்.} -

இது நான்காம் திரு முறையில் 29-ஆம் திருப்பதிகத்தில் ஐந்தாவது பாட்டாக அமைந்தது.