பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 அப்பர் தேவார அமுது


அச்சம் இல்லாத அந்த நிலையைப் பெற்றவர்கள் யார்? யார் பிறப்பு இறப்பின்றி உள்ளானோ அந்தப் பரம் பொருளின் சார்பு பெற்று, அவனோடு ஒட்டி உறவாடி இணைந்து, அருள் வலிமை பெற்றவர்கள் எதற்கும் அஞ்சாத நிலையை அடைவார்கள்.

அப்பர் சுவாமிகள் அவ்வாறு அச்சத்தைத் தவிர்த்த பெரு வீரர். மரணம் இல்லாதவனைச் சார்ந்தமையால் அந்த வீரம் அவருக்கு உண்டாயிற்று. அதை அவர் சொல்கிருர்.

திருவதிகை வீரட்டானம் என்னும் திருத்தலத்தில் சிவ பெருமானை வழிபட்டு அவனுடைய அருள் வலிமையைப் பெற்றவர் அவர்; அவனுடைய தமர்களாகிய அடியார் கூட்டத் தில் ஒருவராகி விட்டவர். ஆகவே, அவர் எதற்கும் அஞ்சாத திண்ணிய நெஞ்சம் உடையவரானர். அவர் சொல்வதைக் கேட்கலாம்.

"நாம் ஒப்பற்ற ஒருவருடைய தமருள் ஒருவராகி விட் டோம். ஆதலால் நாம் எதற்கும் அஞ்சமாட்டோம். நாம் அஞ்சும்படி இனி வரப் போகிறது யாதும் இல்லை” என்கிறார். "மரணம் வருமே அதற்கு அஞ்ச மாட்டீர்களோ?” என்று கேட்டால், 'நாம் அஞ்சும்படி வரப் போகிறது யாதும் இல்லை’ என்று மிடுக்கோடு சொல்கிறார்.

. 'அந்த ஒருவர் யார்?’ என்று நாம் கேட்கிருேம்

'சொல்கிறோம். நிதானமாகக் கேளுங்கள். நீங்களும் அவரை அடைந்து இந்த நிலையை அடையலாம். அதளுல் விளக்கமாக அங்க அடையாளங்களுடன் அவரைப் பற்றிச் சொல்கிறோம். கேளுங்கள்” என்கிறார்.

"இப்படி யார் சொல்லப் போகிறார்கள்? தயை செய்து சொல்லுங்கள் ; கேட்கலாம்'.என்கிறோம்.

"அவர் நீங்கள் கண்டு தரிசிக்கும்படியான திருக்கோலத்தோடு எழுந்தருளியிருக்கிறார். அந்தக் கோலத்தைச் சொல்லட்டுமா ?”