பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 அப்பர் தேவார அமுது

(விண்- வானுலகத்திலுள்ள தேவர்கள்; ஆகு பெயர். வேட்க- வேள்வி செய்யும் உரிமையுடையவர்கள் அதனைச் செய்யும்படி. பண் - இராகம். பயில - பலகாலும் சொல்லிப் புகழ. அருளும்: உம்மை, எச்சவும்மை; அவருக்கு ஒரு பதவி யைக் கொடுத்ததோடு மண்ணினத் தாவும் ஆற்றலையும் கொடுத்தார் என்றபடி, நெற்றி - நெற்றியில். சேர்ப்பு. கடற்கரை; சேர்ப்பனர் - கடற்கரைக்குத் தலைவர். ஏகாரம், ஈற்றசை.)

நான்காம் திருமுறையில் 30-ஆவது திருப்பதிகத்தில் உள்ள இரண்டாவது திருப்பாட்டு இது.