பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. கண்ணிடை மணியர்

விரிந்த உலகத்தில் மனிதர்கள் உலாவுகிருர்கள். அவர் கள் வாழ்கின்ற வீடுகள் பல விதமாக இருக்கின்றன. சிலர் குடிசைகளிய் வாழ்கிருர்கள். சிலர் சற்றே பெரிய கூரை வீடு களில் வாழ்கிருர்கள். ஒட்டுவில்லை வீட்டில் வாழ்வாரும், மாடி வீட்டில் வாழ்வாரும், பங்களாவில் வாழ்வாரும் இருக்கிருர்கள். அவரவர் செல்வ வளத்துக்கு ஏற்றபடி அவரவர் தமக்குரிய இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு வாழ்கிருர்கள். இந்த இடங்களெல்லாம் உடம்பு வாழும் இல்லங்கள்.

ஆல்ை உயிரே ஒரு குடிசையில்தான் வாழ்கிறது. எவ் வளவு பெரிய வள வாழ்வுடையவரானலும், பெரிய திரு மாளிகையில் வாழ்பவரானுலும் அவருடைய உயிர் என்னவோ ஒரு குடிசையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அந்தக் குடிசையின் சுவர்கள் பார்ப்பதற்குக் கொஞ்சம் அழகாக இருக், கலாம். ஆனால் உள்ளே எல்லாம் ஊழல். பிரித்துப் பார்த்தால் அழுக்கும் மாமிசமும் இரத்தமும் நரம்புகளுமே இருக்கும். அந்தக் குடிசைக்குத்தான் உடம்பு என்று பெயர். உடம்புக் குள்ளே உள்ளவற்றைச் சற்றே நினைத்துப் பாருங்கள். வாந்தி, யெடுக்கத்தான் வரும்,

இந்த உடம்பு தோலால் போர்த்திருக்கிறது. அது போதா தென்று அழகான ஆடைகளையும் அணிகலன்களையும் புனைந்து இதற்கு அழகு செய்கிருேம். - -

கொஞ்சம் அழகாக இருக்கிறவர்கள் நிலைக் தம் உருவத்தைப் பார்த்துத் தாமே மகிழ்ந்து போவார்கள். அழகிய பெண்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. அவர்களுக்காகாகவே கண்ணுடி படைக்கப்பட்டிருக்கிறது போலத் தோன்றுகிறது. அடிக்கடி கண்ணுடியில் தம் முகத்தைப்