பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 அப்பர் தேவார அமுது

பார்த்துக் கொண்டு வண்ணப் பொடி பூசித் திலகம் வைத்தும் கொண்டு மகிழ்கிருர்கள். எவ்வளவு அலங்காரம் செய்தாலும் இந்த உடம்பு ஆபாசம் நிறைந்த கொட்டில்தான்.

'ஊற்றைச் சரீரத்தை ஆபாசக் கெரட்டிலை

ஊன்பொதிந்த காற்றுத் துருத்தியைச் சோறிடும்

தோற்பையை’

என்று இதை வருணிக்கிருர் பட்டினத்தார்.

இந்தக் குடிசையைப் பெரிதாக எண்ணி மதித்து, உலக இன்பங்களைத் துய்த்து மகிழ்ச்சி அடைகிருேம். உடம்பிலுள்ள பஞ்சேந்திரியங்களுக்கும் இரை தேடுவதையே நம் தொழி லாகக் கொண்டு வாழ்வு முழுவதும் கழிக்கிருேம். இந்த உடம் பிலே அதிக மோகம் கொண்டு நிற்கிருேம்.

மண்ணிடைக் குரம்பை தன்னை மதித்து நீர் மையல் எய்தில்.

இவ்வாறு உடம்பின்மேல் பற்று வைத்து மயங்கி வாழ் கிருேம். இந்த உடம்பு எப்போதும் நிலையாக இருக்குமோ? நம் கண்முன்னுலேயே இது தளர்ச்சி அடைகிறது. தசைகள் சுருங்குகின்றன. மடிப்புகள் விழுகின்றன. மயிர் நரைத்துப் போகிறது. நரை, திரை, மூப்பு என்பவை இந்த உடம்பு வளர்ந்து பிறகு தளரும்போது உண்டாகின்றவை. ஒரு நாள் இந்த உடம்பை விட்டு உயிர் பிரிந்து விடுகிறது.

உயிர் போகும்போது யமன் வந்து இதைக் கொண்டு போவான், "நான் அருமையாகப் பாதுகாத்து வைத்திருக்கிற உடம்பு இது; இன்னும் சிறிது காலம் இதில் வாழ்கிறேன். பிறகு நீ வரலாம்' என்ருல் அவன் போவானே? “கோடி பொன் கொடுக்கிறேன்; சிறிது நேரம் பொறுத்துக்கொள். நான்