பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 அப்பர் தேவார அமுது

யங்கள் இருக்கும் என்ற அறிவும் நமக்கு இல்லை. எத்தனை பிறவி எடுத்தாலும் உடம்பும் வாழ்க்கை முறையும் மாறுமே யன்றி உயிர் மாறுவதில்லை. அது நித்தியமானது. ஒவ் வோர் உடம்பாகக் குடிபுகுந்து வாழ்ந்து மறுபடி வேறுடம்புக் குப் போகிறது.

இந்த உடம்பைப் பாதுகாப்பதற்கு நாம் பல பொருள் களைப் பற்றி நிற்கிருேம். உணவு, உடை, வீடு முதலிய பல வற்றிலே பற்றுக் கொண்டு அவற்றை நாடிச் செல்கிருேம்; முயன்று பெறுகிருேம். பல காலம் பயன்படும் பொருளாகிய பெருஞ் செல்வம், வீடு, நிலம் இவற்றைச் சேர்த்துக் கொண்டு வாழ்கிருேம். மாதம் மாதம் சம்பளம் வாங்குகிறவனைவிடப் பெருந்தொகையைச் சேமித்துக் கொண்டவன் வாழ்வு சிறப் படைகிறது. அவ்வப்போது உழைத்துச் சம்பாதித்து உணவுப் பொருள்களைப் பெறுகிறவனேவிட நிலமுள்ளவன் தனக்கு வேண்டிய உணவுப் பொருள்களைப் பெற்று நன்ருக வாழ் கிருன்.

நமக்குப் பயன்படும் பொருளை நாம் காப்பாற்றி வைத் துக் கொள்கிருேம். அதில் பற்று வைத்துப் பேணி வரு கிருேம். உடம்பின் சுகத்துக்காகவும் அறம் செய்யவும் மனைவியிடம் பற்று வைக்கிருேம். அவ்வப்பொழுது சந்தித்துப் பழகும் மனிதர்களிடம் வைக்கும் பற்றைவிட நெடுங்காலம் நம்முடன் வாழும் மனைவியிடமும் மைந்தரிடமும் நெருங்கிய உறவினரிடமும் பற்றுக்கொண்டு பழகுகிருேம். அறிவுடை யவன் நெடுங்காலம் பயன்படும் பொருள்களில் பற்று வைத் துப் பாதுகாப்பான். -

உடம்பு வாழும் வாழ்க்கையில் நெடுங்காலத்துக்குரிய பொருள்களை ஈட்டி அவற்றைப் பற்றிக் கொண்டு பேணு பவர்கள் அறிவாளிகள் என்ருல், உயிர் வாழும் நெடுவாழ்க் கைக்குப் பயன்படும் பொருளைச் சேமித்துக் கொண்டவர்கள் பின்னும் பெரிய அறிவாளிகள். அத்தகைய நீண்ட பற்றைப்