பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 அப்பர் தேவார அமுது

சமண சமயத்தில் புகுந்து பல காலம் இருந்து பிறகு, மீண்டும் சைவரானவர் நாவுக்கரசர். இறைவனைப் பற்றிக் கொள்ளும் பற்று உறுதியாக ஆரம்பத்திலே இருந்தால் இந்த மாற்றம் வந்திராது, அத்தகைய பற்று இல்லாமையால் என் முயற்சிகளையெல்லாம் பயனற்ற வகையில் போக்கினேன். விளையும் நிலத்துக்கு இறைத்த நீரும் நம் உழைப்பும் பயனைத் தரும். நிலத்தில் விளைச்சல் உண்டாகும். யாழ் நிலத்துக்கு இறைத்தால் நீரும் பாழாகும்; முயற்சியும் பாழாகும். அப்படித்தான் நான் வாழ்ந்தேன். கருவி கரணங்கள் நன்ருக அமைந்திருந்தாலும் அவற்றைக் கொண்டு இறைவன்மேல் பற்று வைத்துப் பக்தி செய்யாமல் போனேன்’ என்று விளக்கிக்கொள்ளும்படி பாடுகிருர்,

பல காலம் கழித்து இப்போது எனக்கு அறிவு வந்திருக் கிறது. நூல்களாலும் நல்லோர் உபதேசங்களாலும் திருத்த மான வாழ்வு வாழ்வதற்கு வழி இருக்கிறது. உத்தமர்கள் அவற்றைப் பயன்படுத்திக்கொண்டும் தாமே ஆராய்ந்தும் இதுதான் நன்னெறி என்று உணர்ந்து வாழ்வார்கள். மத்தி மர்கள் தம் முயற்சி சிறிதாக இருந்தாலும் பிறர் நலம் பெறு வதைக் கண்டு அப்படியே தாமும் வாழ வேண்டும் என்று எண்ணி, அதற்குரிய வழிகளை நல்லாரை நாடிக் கேட்டு அதன்படி ஒழுகுவார்கள். அதமர்களோ நூலையும் ஒதாமல் நல்லோர் உரைகளையும் கேளாமல் வாழ்வார்கள். அவர்கள் துன்பப்படும் போதுதான், இதற்குரிய பரிகாரத்தைத் தேட வேண்டுமே என்று நினைப்பார்கள். கயவர்கள் துன்பத்தை அநுபவிக்கும்போதுதான் தம் கயமையை உணர்ந்து திருந்த முயல்வார்கள். பட்டறியும் தன்மை உடையவர்கள் அவர்கள். அவர்களைப்போல் நானும் இருந்தேன். பட்டறி, கெட்டறி, பத்தெட்டு இறுத்தறி” என்ற பழமொழியை என்னளவில் அநுபவத்தில் இப்போது உணர்கிறேன்.”

உற்றலால் கயவர் தேருர்

என்னும் கட்டுரையோடு ஒத்தேன்.