பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. சிவநெறி அனைத்தும் ஆளுர்

இந்த உலகத்தில் வாழும் மக்கள் தம் ஆயுட் காலம் முடிந் தவுடன் இறந்துபோகிருர்கள். அவர்களுக்கு முன்பு பிறந்த வர்களும் இறந்து போளுர்கள். இந்த மக்களுக்கு முன்பே இருந்து பின்பும் வாழ்கிறவர்கள் தேவர்கள். அவர்களுக்கும் இறுதிக்காலம் உண்டு. தோன்றுவதும் மறைவதுமாகிய இரண்டும் உலக மக்களுக்கு இருப்பது போலவே அவர்களுக் கும் உண்டு. ஆனல் கால நீட்சியில் வேறுபாடு உண்டு. நமக்கு ஓர் ஆண்டு தேவர்களுக்கு ஒரு நாள். அவர்கள் தங்கள் காலம் முடிந்தவுடன் மறைவார்கள், அவர்களில் இந்திரன் நெடுநாள் வாழ்வான். பிரமன் அவனைவிட நீண்ட காலம் வாழ்பவன். தேவர்கள் தோன்றுவதற்கு முந்தியே பிரமன் தோன்றி யிருப்பவன். தேவர்களுக்கு முந்தியவன் பிரமன். அவனுக்கு முந்தியவர் திருமால். இவ்வாறு முந்தியுள்ள அனைவருக்கும் முந்தி உள்ளவர் சிவபெருமான்.

முந்தையார் முக்தி உள்ளார்.

பிரமன் தோன்றியபோது தனக்கு முன்பே திருமால் தோன்றியிருப்பதை அறிவான். இப்படியே ஒவ்வொருவருக் கும் முன்பே தோன்றியவர் இருப்பார். தமக்குமுன் தோன் றியவர் யாரும் இல்லாமல், முன்பு தோன்றியவர்கள் யாவருக் கும் முற்பட்டு ஆதி மூர்த்தியாக இருப்பவர் இறைவர்.

பிரமா, விஷ்ணு, ருத்திரன் என்று சொல்லும் மூன்று மூர்த் திகளுக்கும் முன்பே இருந்து அவர்களுக்கு முதல்வராக இருப்

பவர் அவர்.

மூவர்க்கும் முதல்வர் ஆளுர்,