இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
154
அப்பர் தேவார அமுது
என்பது அப்பர் திருவாக்கு, இறைவர் பிறர் அணியாத சாதாரண மலராகிய கொன்றையை அணிந்திருந்தாலும் அவர் இருக்கும் இடத்தில் பூவினுட் சிறந்த தாமரைகள் மலர்ந்து விளங்குகின்றன. ஏ: ஈற்றசை.
நீதியார், வல்லவர். இடைமருது இடம் கொண்டார் என்று ஆற்றொழுக்காக முடித்துப் பொருள் செய்க.]
நான்காம் திருமுறையில் 35-ஆம் பதிகத்தில் மூன்றாவது பாட்டாக உள்ளது. இது.