பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 அப்பர் தேவார அமுது


தம்முடைய கரங்களில் பல வகை வண்ணமும் மணமும் கொண்ட மலர்களைக் கொண்டு இறைவன் கழலைத் தொழுபவர்கள் உள்ளத்தில் அந்தப் பக்திக்கனல் சுடர்விட்டு எரியும். கையிலே தண்மையான மலரை ஏந்தி இறைவனை அருச்சிப் பவர்கள் கருத்தில் அந்தப் பக்திக் கனல் மூண்டு, பொய்யான எண்ணங்களையும் ஆசையையும் எரித்துச் சுடர்விட்டு நிற்கும். அத்தகைய காதல் தீயை உள்ளத்தில் வைத்து அது கனலாக நின்று எரிய வழிபடுபவர்களுக்கு முன்னால் இறைவன் வந்து நிற்பான்.

கழற்கு அங்கை பன்மலர் கொண்டு
காதல் கனற்ற நின்றானும்.

"தானம் குலம் கல்வி’ முதலிய பத்தையும் எரித்துத் போக்கிப் பசி என்னும் தீ எழுந்து வருத்தும் என்று சொல்வார்கள். அதுபோல இறைவன்பால் கொண்ட காதல் என்னும் தீ உள்ளத்தில் கொழுந்து விட்டு எரியுமானல் அங்கே உள்ள மற்றத் தீய எண்ணங்கள் யாவும் அந்தக் கனலில் எரிந்து சாம்பலாகிப் போய்விடும்.அந்தக் காதல் ஒன்றே தனிச்சுடராக நின்று ஒளிரும். அவர்களுக்குப் பரஞ்சுடராகிய ஆண்டவன் தன் திருக்கோலத்தைக் காட்டியருளுவான்.

அன்பர்களின் உள்ளத்தில் எழும் பக்திக்கனலை உகந்து அருள்புரியும் அப்பெருமான் தன் திருமுடியில் தண்மையான கங்கையை வைத்துள்ளான். கங்கையென்னும் நீர்மகளைத் தன் அழகிய சடாபாரத்தில் மறைத்துவைத்திருக்கிறான். உமாதேவி கண்டால் ஊடல் கொள்வாள் என்ற எண்ணமோ?

குழற் கங்கையாளை உள் வைத்துக்
கோலச் சடைக் கரந்தானும்.


கங்கையென்னும் மகளுக்கும் கூந்தல் உண்டு, கருமணல் ஆற்றில் விரவியிருக்கும். அது கூந்தலைப்போலக் காட்சி தரும் . அன்றிப் பெண் உருவத்தில் இறைவன் திருமுடியில் உள்ள