பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அப்பர் தேவார அமுது


இறைவன் திருமேனி செம்பொன் வண்ணம் உடையதாதலின் திருத்தோளும் அவ்வண்ணம் உடையதாயிற்று, 'பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்" என்பது பொன்வண்ணத்தந்தாதி.

நீண்ட முடியின் ஒளிக்கு ஞாயிறு உவமை. ஆரூர் அமர்ந்த அம்மான் சேவடியானும், தோளுடையானும்,நீள்முடி யானும் ஆவான் என்று முடிக்க.]

நான்காம் திருமுறையில் நான்காம் பதிகத்தில் எட்டாவது பாட்டு இது.