பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 அப்பர் தேவார அமுது

உணர்வு தோன்றும். பதவி மோகமும் வளவாழ்வில் உண் டாகிய அகந்தையும் அப்போது அடங்கி, இவை யாவும் எம். மாத்திரம் இறைவன் துணை இல்லாவிட்டால் நம்முடைய வாழ்வு நில்லாது” என்று உணர்வார்கள். அத்தகையவர்களுக் குத் துன்பத்தினின்றும் அவர்களை விடுவிக்கும் பெரும்பேரும் இருக்கிருன் இறைவன். .

விண் பொருந்து தேவர்க்கும்

வீடுபேருய் கின்ருனே.

மண்ணவர்க்கும் புனிதமான வேதியர்க்கும் தேவர்க்கும். வீடுபேருய் நின்ருனைப் பற்றிக் கொண்டவள் அப்பராகிய நாயகி, அவன் எழுந்தருளியிருக்கும் தலங்களுக்குச் சென்று ஆராக் காதலோடு தரிசனம் செய்து இன்புறுகிறவள்.

திருப்பழனம் என்னும் திருத்தலத்துக்கு வந்தாள் நாவுக் கரசு நாயகி, அங்கே அடியவர்கள் இறைவனைப் பாடி ஆடிக், களித்துக்கொண்டிருந்தார்கள்; பண்ணைப் பொருத்தமாக இசைத்து இறைவனுடைய இசையைப் பாடினர்கள். அவனைத். தரிசித்து அப்பருடைய கண்கள் களித்தன. கருத்தில் இன்பம் பொங்கியது. அகத்தின் அந்தரங்கத்திலே அவனுடைய திரு. வுருவம் பதிந்தது.

பண் பொருந்த இசைபாடும்

பழனம் சேர் அப்பன.

பிறகு எப்போதும் அவனுடைய நினைவுதான். எங்கே: பார்த்தாலும் எதைப் பார்த்தாலும் அவனுடைய கோலமே. தோன்றியது, எந்தப் பணி செய்தாலும் மனத்தில் அந்தக் கோலம் சுருதிபோட்டுக் கொண்டிருந்தது. இசைவாணர்கள் எந்த ராகம் பாடினலும், ஆரோகண அவரோகணகதியில் இசைத்தாலும், கீர்த்தனங்களைப் பாடினுலும் எல்லாம் சுருதி யோடே ஒட்டிவரும். அது மாறினுல் அபஸ்வரம் வந்துவிடும். மூக்கால் முனகி ராகம் பாடினுலும் வாக்கால் வெளிப்படப் பாட்டை இசைத்தாலும் எல்லாம் சுருதியோடு இழைந்தே,