பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 அப்பர். தேவார அமுது:

இருப்பது அரிது. அந்த அரிய அநுபவம் மெய்யன்பர் களுக்குக் கிட்டும். உறங்கும் பொழுதும் நான் விட எண்ணி ஞலும் விட முடியாதபடி ஒட்டிக்கிேடக்கிறது, அந்த உறவு’ என்கிருர் அப்பர். கடவேனே என்பது கடமைப்படுவேனே என்ற பொருள் தராமல், ஆற்றல்.உடையவனுக இருப்பேனே. என்ற பொருளைத் தந்தது.

'இறப்பதனுக்கு என் கடவேன்’

என்ற திருவாசகத்தில் கடவேன் என்பது என்ன செய்யும் வலிமையுடையேன் என்று பொருள் கொள்ள நிற்பது போல நின்றது. இது. x-r -

கைவிட்ல் என்பது கையின்செயலைக் குறிக்காமல் விடல் என்னும் பொருட்டாய் நின்றது. ஒகாரம், ஆஎதிர்மறை, கைவிடும் ஆற்றல் இல்லேன் என்னும் பொருள் தந்தது.)

நான்காம் திருமுறையில் 5-ஆம் திருப்பதிகத்தில் உள்ள ஐந்தாம் திருப்பாட்டு இது.