பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகந்தையைப் போக்கும் திருவடி 59

கெடுகெடு இற்று விழ விரல் உற்ற பாதம்

நினைவுற்றது என்றன் மனனே.

பெருவரமும் பேராற்றலும் திக்கு விசயம் செய்து வென்ற செருக்கும் மிடுக்குமுடைய இராவணனுடைய ஆற்றலையும் அகந்தையையும் கால்விரல் ஒன்றே போக்கியது என் பதை உணர்ந்து, அந்தத் திருவடியையே பணிந்து பற்றி மனத்தால் தியானம் பண்ணில்ை நம் உயிருக்குப் பகையாகிய எந்த ஆற்றலும் நம்மிடம் பயன்படாதொழியும் என்ற உறு திப் பாட்டுடன் பாடுகிருர் அப்பர் சுவாமிகள்.

கடுகிய தேர்செ லாதுகயி லாயtதுகரு தேல்உன் வீரம் ஒழி;ே * - முடுகுவது அன்றுதன்மம் எனகின்று

பாகன்மொழி வானகன்று முனியா, - விடுவிடு என்றுசென்று விரைவுற் றரக்கன்வரை

உற்றெடுக்க முடிதோள் ‘. . . . . . . நெடுநெடு இற்று வீழவிரல் உற்ற பாதம்கினை

வுற்ற தென்றன் மனனே. * வேகமாக வானத்தின்மீது சென்ற இராவணனுடைய தேர் மேலே செல்லாமல் நிற்க, இந்தத் தேர் கைலாயத்தின் மீது செல்லாது. இதைக் கடக்கக் கருதாதே; உன் வீரத்தை நீ ஒழிவாயாக; இதற்கு மேலும் விரைந்து செல்ல எண்ணுவது முறை அன்று என்று தேரை நிறுத்திப் பாகன் சொல்ல, அவ்வாறு சொன்னவனுடைய அறிவுரையைக் கேளாமல் அவனைக் கடுமையாகக் கோபித்துக் கொண்டு, "இதை நான் எடுத்து வீசுகிறேன் பார்' என்று அகங்காரத் தோடு விடுவிடுவென்று வேகமாகச் சென்று அவன் அந்தக் கைலையின் கீழே சென்று அதை எடுக்க முயன்ற போது, அவ னுடைய பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நெடுநெடு என்று நசுங்கி வலியிழந்து இற்றுப்போய் விழும்படியாகச் செய்த விரலை உடைய இறைவனுடைய திருவடிகளை அடியே னுடைய மனம் என்றும் நினைந்து தியானித்தது. 赏