பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ந்நின்றவர்க்கு மெய்யர் 63 பாடுகள் என்று சொல்லலாம், காலமோ இடமோ இன்ன தன் மையதுதான் என்று சொல்லமுடிவதில்லை. இவ்வாறு நமக்குள் இருக்கும் இதயத்தையும் நமக்குப் புறம்பே இருக்கும் இயற் கையையும் இக்தகையவைதாம் என்று நம்மால் வரையறுக்க முடிவதில்லை. நம் இதயத்திலுள்ள குறைபாடுகளை இதய ஆராய்ச்சி நிபுணரிடம் சென்று காட்டித் தெரிந்துகொள் கிருேம். ' ' ' ' ',

இவ்வாறே, நாம் அறியாத பலவற்றைத் தாம் அறிந்து சொல்லும் நிபுணர்கள் இருக்கிருர்கள். உலக நியதியையும் அதை நிகழ்த்துகின்ற ஒரு மாபெரும் சக்தியையும் அவர்கள் அறிந்துகொண்டிருக்கிருர்கள். அவர்களையே நாம் ஞானி கள் என்று சொல்கிருேம். அவர்கள், இறைவன் என்பவனே எல்லாவற்றையும் இயக்கும் மாபெரும் சக்தி என்று அறி கிருர்கள்; நமக்கும் அறிவிக்கிருர்கள். அவனைப் பற்றிய 'உணர்வு உண்டாகவேண்டுமானல் அதற்காக முயற்சி செய்ய வேண்டும். நிலையாத பொருள்களே நிரம்பிய உலகத்தில் எது நிலைபெற்றது, எது நிலையற்றது என்று தெரிந்து கொள்ள முயல வேண்டும். இந்த ஆராய்ச்சியில் புகுந்தால் மெல்ல மெல்லப் பொய்யெல்லாம் நழுவிப் போக மெய் புலனுகும்.

அந்த மெய்யான பொருள் பேராற்றல் உடையது; எல்லாவற்றையும் இயக்குவது; தன் அன்பர்களுக்கு வடிவம் காட்டி உள்நின்று ஒளிர்வது. • -

அந்தப்பொருளையே தம்முடைய சாதனைக்கு ஏற்ப உள்ளே கண்டு உணர்ந்து அநுபவிக்கிருர்கள், மெய்யன்பர்கள். ஒவ் வொருவருக்கும் ஒவ்வொருவகையில் அந்தப் பொருள் தோற் றழ் அளிக்கிறது. அந்தப் பொருளின் அருள் ஆட்சிக் குன் அகப்பட்டவர்கள் வெவ்வேறு வகையில் சாதனை செய்யப் புகுந்தவர்களானலும் முடிவில் அடைகின்ற இன்ப அநுபவம் ஒன்றுதான். : ت